தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் டிஜிபி பி,கே.ரவி, விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விருப்ப ஓய்வு பெற்ற டிஜிபி ரவி
1989 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான B.K.ரவி, மாநில சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தார். இவர் தமிழகத்தில் விருதுநகர், பரமக்குடி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காவல்துறையில் முக்கிய பதவியில் பணியாற்றி உள்ளார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது பிகே ரவியின் பணி மெச்சத்தக்கதாக இருந்தது. தீயணைப்பு துறை டிஜிபியாக ரவி இருந்தபோது, ‘விபத்தில்லா தீபாவளி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார். இத்தகைய சூழலில், பதவிக்காலம் முடிவடைய 3 மாதங்கள் உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறுவதாக B.K.ரவி அறிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்
பி.கே.ரவி விருப்ப ஓய்வு பெற்று பீகார் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவை இன்று மாலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் இருந்து போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்