பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் 95 வயதில் காலமானார்

Published : Apr 25, 2023, 09:23 PM ISTUpdated : Apr 25, 2023, 09:40 PM IST
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் 95 வயதில் காலமானார்

சுருக்கம்

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் 95 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். 75 ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டிருந்தவர்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் 95 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். 

சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். 95 வயதான இவர் இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமாவால் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பிரகாஷ் சிங் பாதல் மொகாலியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் செவ்வாய் இரவு அவர் காலமானார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் பாதலின் நலம் குறித்து கேட்டறிந்தனர். பாதலின் மகன் சுக்பீர் சிங் பாதல் சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர். மகள் பர்னீத் கவுர் முன்னாள் அமைச்சர் ஆதீஷ் பர்தாப் சிங் கைரோனை மணந்தார். பாதலின் மனைவி சுரிந்தர் கவுர் பாதல் மே 2011 இல் புற்றுநோயால் இறந்தார்.

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் நிவாரணம் கிடைக்குமா? குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது நாட்டின் மிகவும் வயதான வேட்பாளராகப் பெயர் பெற்றார். ஆனால் ஆம் ஆத்மி சார்பில் முதல் முறை தேர்தலில் களம் கண்ட முன்னாள் எம்பி ஜக்தேவ் சிங் குடியனின் மகன் குர்மீத் சிங் குடியனிடம் தோல்வி அடைந்தார். பாதல் போட்டியிட்ட 13வது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாதல் அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டார். லாம்பியில் தொடங்கிய நன்றி தெரிவிக்கும் பயணமும் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

பின்னர், கிராமத்தில் உள்ள தனது இல்லங்களிலும், ஹரியானாவில் உள்ள பலசார் கிராமத்தில் உள்ள சண்டிகர் பண்ணை இல்லத்திலும் நேரத்தைச் செலவிட்டு வந்தார். கடந்த காலங்களில் பாதல் பல சாதனைகளை படைத்துள்ளார். 1952ஆம் ஆண்டு பாதல் கிராமத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இளைய பஞ்சாயத்துத் தலைவர் என்று பேர் பெற்றார். தவிர, 1970ஆம் ஆண்டு மாநிலத்தின் இளைய முதல்வராகவும் ஆனார். 2012ஆம் ஆண்டில் முதல்வரானபோது மிகவும் வயதான முதல்வராகவும் ஆனார்.

1970-71, 1977-80, 1997-2002, 2007-12 மற்றும் 2012-17 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை முதல்வராக இருந்த சாதனையைப் படைத்தவர் பிரகாஷ் சிங் பாதல். தவிர, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது மத்திய விவசாய அமைச்சராகவும் குறுகிய காலம் பணியாற்றினார்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இதுதான் வித்தியாசம்! மற்றொரு பிடிஆர் ஆடியோ வெளியிட்டு அண்ணாமலை ட்வீட்

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!