KP Oli:இந்தியா ஆக்கிரமித்த இமாலயப் பகுதிகளை மீட்போம்: நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி சர்ச்சைப் பேச்சு

By Pothy RajFirst Published Nov 5, 2022, 9:24 AM IST
Highlights

நேபாளத்தில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், இந்தியா ஆக்கிரமித்துள்ள இமயமலைப் பகுதிகளை மீட்போம் என்று முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நேபாளத்தில் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், இந்தியா ஆக்கிரமித்துள்ள இமயமலைப் பகுதிகளை மீட்போம் என்று முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

நேபாளத்தில் வரும் 20ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. 

பூமியில் இன்று விழ இருக்கும் சீனாவின் 23 டன் ராட்சத ராக்கெட்! எங்கு விழுமோ??

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள தர்சுலா மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான கே.பி.ஷர்மா ஒலி பங்கேற்றார். 

அப்போது அவர் பேசுகையில் “ இந்தத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இமயமலைப் பகுதியில் இந்தியா ஆக்கிரமித்துள்ள நமது கலாபானி, லிபுலேக், மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை நாங்கள் மீட்போம். நாட்டை பாதுகாக்க எங்கள் கட்சி உறுதி பூண்டுள்ளது. நமது தேசத்தின் ஒரு இஞ்ச் அளவு நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்

நேபாள காங்கிரஸ் தலைவரும் பிரதமருமான ஷெர் பகதூர் தியூபா கூறுகையில் “ நேபாளத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெறுவதற்காக ராஜாங்கரீதியிலான பேச்சு வார்த்தையும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்

சீனா பாகிஸ்தான் கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர்; இந்தியா கடுமையான கண்டனம்!!

முன்னாள் பிரதமர் டாக்டர் பாபுராம் பட்டாரியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தேசிய ஒருமைப்பாடு விஷயத்தை தேர்தலுக்காக யாரும் பயன்படுத்தக்கூடாது. நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளை தேர்தல் ஆதாயத்துக்காக எந்தக் கட்சியும், எந்த நபரும் பயன்படுத்தக்கூடாது .

நேபாளத்தின் மன்னராக இருந்த மகேந்திரா, கடந்த 1960களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீக்கிவிட்டு சர்வாதிகார ஆட்சி நடத்தினார். பாசிசத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் மட்டுமே தேசியவாதத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தியுள்ளார்கள் ” என்று ஒலியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-நேபாள உறவு நீண்டகாலமாக சுமூகமாக இருந்து வந்தது. ஆனால், நேபாளத்தின் பிரதமராக ஷர்மா ஒலி வந்தபின் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.

2020, மே 8ம் தேதி உத்தரகாண்டில் லிபுலேக் மற்றும் தார்சுலா இடையிலான சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். அப்போது இருந்து நேபாள அரசு, லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா பகுதிகள் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடிவருகிறது, இந்தியா ஆக்கிரமித்துவிட்டது என குற்றம்சாட்டி வருகிறது.

இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி

அது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்துக்குப்பின் அவசரஅவசரமாக வரைபடத்தை வெளியிட்ட நேபாள அரசு, தங்கள் நாட்டு எல்லைக்குள் கலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை உள்ளடக்கி காட்டியது. இதற்குஇந்தியா தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, நேபாளம் தன்னிச்சையாக எந்த வரைபடத்தையும் வெளியிடக்கூடாது, செயற்கையாக நிலப்பகுதியை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தது.

click me!