திருமணமான பெண் ஒருவர் கணவருடன் செல்லாமல், அழுகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்தின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று, மணமகள் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி, ஒரு புதிய குடும்பத்திற்கு தனது கணவருடன் செல்வதே.
திருமணமான மணமகள் தனது புதிய குடும்பத்துடன் தனது புதிய வாழ்க்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்வதில் வருத்தமாக செல்லும் இந்த நிகழ்வே ஒரு வித உணர்ச்சியை கொடுக்கும்.
இதையும் படிங்க..தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!
இருந்தாலும் சில சமயங்களில் மணமகள் அதிக உணர்ச்சிவசப்படும் நிகழ்வையும் பார்க்கிறோம். இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் திருமணமான மணப்பெண் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தனது கணவருடன் செல்ல விருப்பமில்லாமல் அழுகிறார்.
இருப்பினும், மணமகள் அழுதுகொண்டிருக்கும்போது மணமகளின் குடும்பத்தினர் அவளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்கிறார்கள்.இந்த வீடியோவை bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!
சிலர் இந்த வீடியோவை நகைச்சுவையாக பார்த்தாலும், சிலர் இது சீரியசான விஷயம் என்றும் பதிவிட்டு வருகிறார்கள். நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 61 ஆயிரம் பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..19 வயது பையனை திருமணம் செய்யும் 56 வயது பெண்.. அடேங்கப்பா.! இப்படியொரு காதல் ஜோடியா.!!