குஜராத் மோர்பி பாலம் விபத்து... 5 நாட்களாக நீடித்த மீட்புப் பணி நிறைவு!!

Published : Nov 05, 2022, 12:03 AM IST
குஜராத் மோர்பி பாலம் விபத்து... 5 நாட்களாக நீடித்த மீட்புப் பணி நிறைவு!!

சுருக்கம்

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவுபெற்றதாக பேரிடம் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

குஜராத் மோர்பி பாலம் விபத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவுபெற்றதாக பேரிடம் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் கடந்த 2 ஆம் தேதி மோர்பி பாலம் விபத்துக்குள்ளானது. இந்த பாலம் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்ததால் பாலம் அறுந்து அதில் இருந்த நூற்றுக்காணக்கான மக்கள் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில் சுமார் 135 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் சிறுத்தை… பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

முன்னதாக விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்த மீட்பு பணியில் இந்திய கடலோர காவல்படை,  இந்திய கடற்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையோடு மாநில நிர்வாகம் மற்றும் பிற அமைப்புகளும் ஈடுபட்டிருந்தது. கடந்த 5 நாட்களாக நடைபெற்ற மீட்பு பணியில் 135 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மருத்துவமனை அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு… மருத்துவ ஊழியர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

மேலும் ஆற்றில் விழுந்த பாலமும் அகற்றப்பட்டுவிட்டது. இதுக்குறித்து பேரிடர் மீட்புக் குழு ஆணையர் ஹர்ஷத் படேல் கூறுகையில், மோர்பி பாலம் விபத்தில் 135 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. கடந்த ஐந்து நாட்களாக நடந்த மீட்புப் பணி முடிக்கப்பட்டது. மாயமானவர்கள் குறித்த விபரங்கள் ஏதேனும் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!