Divya Pahuja Murder : 27 வயது மாடல் அழகியான திவ்யா பகுஜா கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சில நபர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சரி யார் இந்த மாடல் அழகி? அவர் ஏன் சுட்டுக்கொல்லப்பட்டார்?.
குருகிராம் பகுதியில் இருந்த மோஸ்ட் வாண்டட் கேங்க்ஸ்டரான சந்தீப் கடோலியை போலி என்கவுன்டர் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தவர் தான் முன்னாள் மாடல் அழகி திவ்யா. கடந்த புதன்கிழமை, குருகிராம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அந்த ஹோட்டலில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகின்றது. ஹோட்டல் CCTVயில் பதிவாகியுள்ள தகவலின்படி கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்த ஹோட்டல் உரிமையாளரான அபிஜீத் சிங்குடன், போலி என்கவுன்ட்டர் வழக்கின் முக்கிய குற்றவாளியான திவ்யா பஹுஜாவும் காணப்படுகிறார்.
ஹோட்டல் வரவேற்பறையில் நின்று திவ்யா பஹுஜா பேசும் காட்சிகள் கிடைத்த 20 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடலை இரண்டு ஆண்கள் ஹோட்டல் தாழ்வாரத்தில் இழுத்துச் செல்லும் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன் பிறகு அவருடைய உடல் அபீஜத்துக்கு சொந்தமான ஒரு BMW காரில் கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்பட்டாலும் அவருடைய உடல் இன்றளவும் மீட்கப்படவில்லை.
27 வயதான பஹுஜா, 2016 ஆம் ஆண்டு தனது அப்போதைய காதலனும், குருகிராம் கேங்ஸ்டருமான சந்தீப் கடோலியின் போலி என்கவுண்டரில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஏன் இந்த கொலை?
பஹுஜா தனது தொலைபேசியில் சிங்கின் சில ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன, அதை அவர் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த ஹோட்டல் உரிமையாளரை அந்த புகைப்படங்களை கொண்டு மிரட்டுவதாகக் கூறப்படுகிறது, இது சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் அவரை சுட வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பகுஜாவின் குடும்பத்தினர் கடுமையாக மறுத்துள்ளனர்.
சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் என்று கூறப்படும் ஓம்பிரகாஷ் மற்றும் ஹேம்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பஹுஜாவின் உடலை அப்புறப்படுத்த சிங் 10 லட்சம் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு அல்லது மூன்று உதவியாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை