Yediyurappa's granddaughter: முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேத்தி தற்கொலை.? தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

Published : Jan 28, 2022, 03:25 PM ISTUpdated : Jan 28, 2022, 03:31 PM IST
Yediyurappa's granddaughter: முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேத்தி தற்கொலை.? தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

சுருக்கம்

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா. இவருக்கு வயது 30. பெங்களூருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு  சௌந்தர்யா உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. "இயற்கைக்கு மாறான மரணம்" என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவின் மகளான சௌந்தர்யா, பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக இருந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய பணியாற்றிய சக மருத்துவரை அவர் மணந்தார். அவர்களுக்கு 6 மாத குழந்தை உள்ளது. மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சௌந்தர்யா வசித்து வந்தார். 

அவரது மரணம் எடியூரப்பா குடும்பத்தினரையும், மாநில பாஜகவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தகவல் அறிந்தவுடன் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று எடியூரப்பா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!