காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்ற அனில் அந்தோணி பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் வி முரளீதரன் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி. இவர் பிபிசி நிறுவனம் வெளியிட்ட 2002 குஜராத் கலவரம் பற்றிய India: The Modi Question என்ற ஆவணப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகத் தொடரப்பட்ட 14 வழக்குகள் தள்ளுபடி!
பிபிசி ஆவணப்படம் பற்றி விமர்சித்த அனில் அந்தோணி, “பாஜகவுடன் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களைப் பற்றி நீண்டகாலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளதுதான். அந்த சேனலில், ஈராக் போருக்கு மூளையாக இருந்த, பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம், நம்முடைய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும்.” எனத் தெரிவித்தார்.
இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அனில் அந்தோணி மறுநாளே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். "நான் பதிவிட்ட ட்வீட்டுக்கு கருத்து சுதந்திரத்துக்கு போராடுபவர்களாகச் சொல்லிக்கொள்பவர்களிடம் இருந்தே சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் வந்தன. அன்பை ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பு வளர்கிறது. அனைத்தும் போலித்தனம்" என்று குற்றம்சாட்டினார்.
மாம்பழ பிரியர்களுக்கு இனிப்பான செய்தி... தபால் மூலம் வீட்டு வாசலுக்கு வரும் மாம்பழம்
I have resigned from my roles in .Intolerant calls to retract a tweet,by those fighting for free speech.I refused. wall of hate/abuses by ones supporting a trek to promote love! Hypocrisy thy name is! Life goes on. Redacted resignation letter below. pic.twitter.com/0i8QpNIoXW
— Anil K Antony (@anilkantony)அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். பிபிசி நிறுவனம் இதற்கு முன் 2020ஆம் ஆண்டு இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை நீக்கிவிட்டு வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். “பிசிசியின் கடந்தகால அபத்தங்கள் சிலவற்றைப் பாருங்கள்... திரும்பத் திரும்ப தவறு செய்யும் பிபிசி நிறுவனம், இந்தியாவின் எல்லையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் திரிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது.” என்று சாடினார்.
Some past shenanigans of BBC , repeat offenders questioning India’s 🇮🇳 territorial integrity, publishing truncated maps without Kashmir. Independent media without vested interests indeed, and perfect allies for the current and partners. pic.twitter.com/p7M73uB9xh
— Anil K Antony (@anilkantony)காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினாலும் பாஜகவில் அவர் சேரமாட்டார் என்று கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக அவர் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று அனில் அந்தோணி பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைந்துவிட்டார்.
கிபூரி ஹீ... கெடுவோ ஹீ... இல்லாத ஆறுகளை உரிமை கோரும் சீனாவின் குறும்பு