சில்லறை விலையை குறைக்க இந்திய உணவுக் கழகம் கோதுமை, அரிசி விற்பனை!

By Manikanda PrabuFirst Published Oct 29, 2023, 12:06 PM IST
Highlights

இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் நியாயமான சராசரி தரம், குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான கோதுமை, அரிசி ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட மொத்த கொள்முதல் செய்வோர்,  வர்த்தகர்கள், கோதுமை, அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்திய உணவுக் கழகமானது வாராந்திர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) மின் ஏல முறையில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட இருப்பு விலையில் நடத்துகிறது. கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய சந்தை விலை முறையே கிலோவுக்கு ரூ.44 மற்றும் ரூ.52 ஆகும். சந்தையில் விலையை உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி எஃப்.சி.ஐ அரிசி மற்றும் கோதுமையை வழங்குகிறது. தமிழக மண்டலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை, அரிசி விற்பனைக்கு மின் ஏல முறையில் டெண்டர் விடப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற 8 வருவாய் மாவட்டங்கள் தஞ்சாவூர்  எஃப்.சி.ஐ, கோட்ட அலுவலகத்தில் உள்ளடங்கியுள்ளன. செம்பனார்கோவில், மத்திய கிடங்கு நிறுவனம் திருச்சி, மத்திய கிடங்கு நிறுவனம் தஞ்சாவூர், தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் திருச்சி மற்றும் தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் புதுக்கோட்டை ஆகிய 5 எஃப்.எஸ்.டி பணிமனைகளும் இதில் வருகின்றன.

Breaking கேரளாவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்!

27.10.2023 தேதியிட்ட டெண்டருக்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் மற்றும் கோதுமையை நியாயமான சராசரி தரத்திலும் வழங்கப்படுகின்றன. இதில் தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் 300 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்)  கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து ஒரு டெப்போவுக்கு ஒரு நபருக்கு 10 மெட்ரிக் டன் முதல் 100 மெட்ரிக் டன் வரை கோதுமையை வாங்க விரும்பும் சிறு (தனியார்) வணிகர்கள் குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.21.25 என்ற விகிதத்தில் மின் ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கொள்முதல் செய்வோர், வர்த்தகர்களை பணியமர்த்தும் செயல்முறை, வாராந்திர மின்-ஏலங்கள், எம்.டி.எஃப், டிப்போ வாரியாக வழங்கப்படும் அளவு மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிய, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www.fci.gov.in அல்லது http://www.valuejunction.in/fci ஆகிய இணையதளங்களை காணலாம்.

click me!