கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய கட்டணம் உயர்வு 15 முதல் 20 சதவீதம் வரை அதிகம் என சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விமான நிறுவனங்கள் முன்பை விட கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளதால், உள்நாட்டில் விமானப் பயணம் அதிக செலவு பிடிப்பதாக மாறியுள்ளது.
ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள், சரஸ்வதி பூஜையை ஒட்டி வரும் நீண்ட வார இறதி விடுமுறை நாட்கள், அடுத்த மாதம் வரும் தீபாவளி விடுமுறை போன்ற காரணங்களால் டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதுதான் விண்ணை முட்டும் கட்டணங்களுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
சென்னையில் இருந்து மெட்ரோ நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களில் இன்னும் ஒரு மாத காலத்துக்கு டிக்கெட் விலை அதிகமாகவே இருக்கும். இந்த விலையேற்றம் டிசம்பர் தொடக்கம் வரை நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது. இதேபோல சென்னை திரும்புவதற்கான கட்டணமும் அதிகமாகவே உள்ளது.
ஆபரேஷன் அஜய்: 235 இந்தியர்களுடன் துருக்கியில் இருந்து டெல்லி வந்த 2வது விமானம்
நவம்பர் மாதத்தில் பெரும்பாலான நாட்களில் மும்பைக்கு ரூ.6,000க்கும் அதிகமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு ரூ.6,000 முதல் ரூ.8,500 வரை விலை உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களாகவே, சிறிய நகரங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவுக் கட்டணம் 10,000 ஐ தொடத் தொடங்கியுள்ளது.
நவம்பர் இறுதி வரை கோவா செல்வதற்கான டிக்கெடுகள் ரூ.4,000 முதல் ரூ.5,700 வரை உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, இந்தக் கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வெவ்வேறு நகரங்களுக்கு பயணிப்பவர்கள், பண்டிகை நாட்களை ஒட்டி பயணிப்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் என டிசம்பர் மாதம் வரை விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுனைடெட் டிராவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அருள் லாசரன் கூறுகையில், "பண்டிகை காலம் என்பதால் வரும் ஜனவரி வரைபயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் சுமார் 60 சதவீதம் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டனர்" என்கிறார்.
எஞ்சியிருக்கும் குறைவான இருக்கைகளுக்கு அதிக போட்டி நிலவுகிறது. இதனால் ஜனவரியில் பொங்கல் விடுமுறைக்கு பிறகுதான் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
நாகை முதல் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்