இந்தியாவில் அதிகம் திருடு போகும் 5 கார்கள்: என்ன காரணம்?

By Manikanda Prabu  |  First Published Oct 24, 2023, 6:41 PM IST

நாட்டில் அதிகம் திருடு போகும் ஐந்து கார்கள் பற்றி தெரியவந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
 


இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு எப்படியாவது ஒரு கார் வாங்கி விட  வேண்டும் என்பது பெருங்கனவாக இருக்கும். கார் வாங்குவது மிகவும் விலை உயர்ந்த பொருளை வாங்குவதாகும். ஆனால், அதனை திருடுவது என்பது முகவும் எளிதானது. கேமராக்கள், திருட்டு எதிர்ப்பு சாதனங்கள், சென்சார்கள் என எது இருந்தாலும், பணத்திற்காக திருடர்களால் கார்கள் திருடப்படுகின்றன.

சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாகனத் திருட்டுகளுக்கு டெல்லி-என்சிஆர்-இல் நடக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் திருடப்படுகின்றன. அந்த வகையில், நாட்டில் அதிகம் திருடு போகும் ஐந்து கார்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். மேலும், அதனுடைய சிறப்பம்சங்களுக்காக அக்கார்கள் திருடப்படுவதாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

மாருதி சுசுகி ஸ்விஃப்ட்: இந்தியாவில் அதிகம் திருடப்படும் கார்


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் அதிகம் திருடப்படும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. 2005ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள கார் திருடர்களிடையே மாருதி சுசுகி ஸ்விஃப்ட் தொடர்ந்து பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. இந்த காரின் ஈர்ப்பு, அதன் எரிபொருள் திறன், அழகியல், மலிவு மற்றும் மறுவிற்பனை மதிப்பினால் திருடர்களின் விருப்பமாக இந்த கார் இருக்கிறது. 1.2-லிட்டர், 4-சிலிண்டர் என்ஏ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இக்கார், 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. ஹேட்ச்பேக் காரான இதன் விலை ரூ.5.99 லட்சத்தில் தொடங்கி ரூ.9.04 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை.

மாருதி சுஸுகி வேகன்ஆர்


நாடு முழுவதும் அதிகம் திருடப்படும் கார்களில் இரண்டாவது இடத்தை மாருதி சுஸுகி வேகன்ஆர் பிடித்துள்ளது. இந்த மாடல் இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு விருப்பமான தேர்வாகும். 1.0-லிட்டர், 3-சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின், மற்றும் 1.2-லிட்டர், 4-சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் விருப்பங்களை வழங்குகிறது. ஸ்விஃப்ட்டைப் போலவே, 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை வழங்குகிறது. வேகன்ஆரின் விலை ரூ.5.54 லட்சத்தில் தொடங்கி ரூ.7.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை.

ஹூண்டாய் க்ரெட்டா


இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் SUVக்களில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டா, நாட்டில் அதிகம் திருடப்பட்ட வாகனங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. திருடர்கள் க்ரெட்டாவையே மறுவிற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், அதன் உதிரி பாகங்கள் மதிப்புமிக்கவை. தொடர்ச்சியான தேவைகள் அதற்கு இருக்கின்றன. 1.5-லிட்டர், 4-சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின்  மற்றும் 1.5-லிட்டர், 4-சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் விருப்பங்களை வழங்குகிறது. இரண்டுமே மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். ஹூண்டாய் க்ரெட்டாவின் விலை ரூ.10.87 லட்சத்தில் தொடங்கி ரூ.19.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை.

எகிறும் TVS Raider விற்பனை.. 70 கி.மீ மைலேஜ்... அப்படி என்ன இருக்கு?

ஹூண்டாய் சான்ட்ரோ


அதிகம் திருடப்படும் கார்களின் பட்டியலில் இடம்பெறும் மற்றொரு ஹூண்டாய் மாடல் ஹூண்டாய் சான்ட்ரோ ஆகும். இந்த கார் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. சிறிய கார்களுக்கு மத்தியில் மலிவு விலை மற்றும் பிரீமியம் அம்சங்களுக்கு பெயர் பெற்ற சான்ட்ரோ, மோசமான விற்பனை காரணமாக நிறுத்தப்பட்டது. திருடர்கள் சான்ட்ரோவை மறுவிற்பனைக்காக மட்டும் குறிவைக்காமல், வாகனம் விற்பனை நிறுத்தப்பட்டதன் காரணமாக, அதிக கிராக்கி உள்ள அதன் மதிப்புமிக்க உதிரி பாகங்களுக்காக இலக்கு வைக்கின்றனர்.

ஹோண்டா சிட்டி


நாட்டில் அதிகம் திருடப்படும் கார்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை ஹோண்டா சிட்டி பிடித்துள்ளது. இந்தியாவில் 1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி கார்கள், நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் ஹோண்டா மாடலாக உள்ளது. 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் வலுவான ஹைப்ரிட் இன்ஜின் என இரண்டு இன்ஜின் விருப்பங்களை வழங்குகிறது. செடான் ரக காரான இதன் விலை ரூ.11.67 லட்சத்தில் தொடங்கி ரூ.16.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை.

click me!