தீவிர புயலாக வலுவடைந்த ஹமூன்: ஒடிசாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்!

By Manikanda Prabu  |  First Published Oct 24, 2023, 4:52 PM IST

தீவிர புயலாக வலுவடைந்துள்ள ஹமூன் புயல், இன்று மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் எனவும், புயல் உருவாகிய பிறகு, அப்புயலானது ஈரான் வழங்கிய பெயரான 'ஹமூன்' என்று அழைக்கப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, ஹமூன் புயல் உருவாகியுள்ளது. இதனால், ஒடிசா மாநிலத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், தீவிர புயலாக வலுவடைந்துள்ள ஹமூன் புயல், ஒடிசாவில் இருந்து 200 கிமீ தொலைவில் கரையை கடப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் அம்மாநிலத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

“வங்காள விரிகுடாவில் மணிக்கு 21 கிமீ வேகத்தில் நகர்வதால், இன்னும் சில மணிநேரங்களில் ஹமூன் மிகவும் தீவிரமான புயலாக வலுப்பெறும்.” என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்பிறகு, இது வடகிழக்கு நோக்கி நகரும் போது படிப்படியாக வலுவிழந்து, இன்று மாலை கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே வங்காளதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்: ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

முன்னதாக, ஹமூன் புயல் காலை 5.30 மணிக்கு பாரதீப்பிலிருந்து (ஒடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கிமீ தொலைவில், திகாவிலிருந்து (மேற்கு வங்காளம்) 240 கிமீ தென்-தென்கிழக்கே, கேபுபாராவிலிருந்து (வங்காளதேசம்) 280 கிமீ தென்-தென்மேற்கில், சிட்டகாங்கில் இருந்து (வங்காளதேசம்) 410 கிமீ தென்மேற்கில் மையம் கொண்டிருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஒடிசா கடற்கரையிலிருந்து 200 கிமீ தொலைவில் கரையை கடப்பதால், கடலோரப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையைத் தவிர மாநிலத்தில் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

click me!