இஸ்ரேல் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து பிறக்காத குழந்தையின் தலையை துண்டித்ததை இஸ்ரேல் பாதுகாப்பு படையானது சமூக வலைதள பக்கத்தில் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் கடந்த சில வாரங்களாக போர் யுத்தம் நடைபெற்று வருகிறது. இரு பிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பாவி மக்கள், குழந்தைகள் உள்பட 5000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த போர் யுத்தமானது 17ஆவது நாளாக நீடித்து வரும் நிலையில்ம் கர்ப்பிணி இஸ்ரேலியப் பெண் மற்றும் அவரது கருவில் இருக்கும் குழந்தை மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலின் கொடூரமான விவரத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகள் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, பிறக்காத குழந்தையின் தலையை துண்டித்ததாக சமீபத்திய X (முன்னர் டுவிட்டர்) பதிவில் IDF கூறியுள்ளது. ஆனால், டுவிட்டர் வழிகாட்டுதலின் படி அந்த புகைப்படத்தை இஸ்ரேல் பாதுகாப்பு படையானது பகிரவில்லை. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் நடந்து வரும் இந்த போர் யுத்தத்தில் இதுவரையில் 2055 குழந்தைகள் உள்பட 5000 பேர் வரையில் உயரிந்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D