சுஷ்மாவுடன் நாளை சந்திப்பு - முடிவுக்கு வருமா மீனவர்கள் பிரச்சனை...?

 
Published : Mar 20, 2017, 05:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சுஷ்மாவுடன் நாளை சந்திப்பு - முடிவுக்கு வருமா மீனவர்கள் பிரச்சனை...?

சுருக்கம்

fishermen meeting with sushma

நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு மீனவர் பிரச்சனை குறித்து நாளை பேச அனுமதி அளித்துள்ளார் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ். இதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

ராமேஷ்வரம் மற்றும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் சில நாட்களுக்கு முன்பு கடலுக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.

பத்து நாட்களுக்கும் மேலாக நடைபற்ற இந்த போராட்டத்தில் தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது.

ஆனால் போராட்டகாரர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பிரித்ஜோவின் போராட்டத்திற்கு நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைதொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த பேச்சுவார்த்தையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்றுத்தருவதாகவும், இனி இது போன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்பதாகவும் உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அமைச்சர்கள் அளித்த வாக்குறுதியின் படி நாளை மீனவர்கள் சுஷ்மா சுவராஜை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக ராமேஷ்வர் மீனவர்கள் தேவதாஸ், சேசுராஜா, அருளானந்தம், ஜஸ்டின், அந்தோணிசாமி, சைமன் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் டெல்லி விரைந்துள்ளனர்.

இதனிடையே மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீனவர் சங்க பொறுப்பாளர்களில் ஒருவரான தேவதாஸ் கூறியதாவது:

மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

இலங்கை அரசு கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும்.

இனிமேல் இலங்கை கடற்படையினரின் தாக்குதல், விரட்டியடித்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

PREV
click me!

Recommended Stories

கம்யூனிஸ்ட்டை மண்ணை கவ்வ வைத்த காங்கிரஸ்..! கேரள உள்ளாட்சித் தேர்தலில் அதிர்ச்சி திருப்பங்கள்
இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!