
கர்நாடாகாவின் முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி என்பவர் பதவியேற்றுள்ளார்
ஹுப்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. ஒரு குழந்தைக்கு தாயான இவர், தனது தந்தையைப் போன்றே ஓட்டுநராக வேண்டும் என்ற எண்ணத்தை சிறுவயது முதலே மனதில் ஆழமாக விதைத்தவர்.
பனியன் தொழிற்சாலையில் இலகுரக வாகனத்தை இயக்கிய ஸ்ரீதேவி, பின்னர் படிப்படியாக கனகர வாகனங்களையும் இயக்கும் லாவகத்தை பெற்றார். இதற்கிடையே கர்நாடக அரசுப் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் பணிக்கு ஆள்சேர்ப்பு நடைபெறுவதை அறிந்து அப்பதவிக்கு விண்ணப்பத்தார் ஸ்ரீதேவி..
இவரது தகுதியையும் ஆர்வத்தையும் பார்த்து ஆச்சரியமடைந்த கர்நாடக போக்குவரத்து துறை அதிகாரிகள் ஸ்ரீதேவிக்கு ஓட்டுநர் பதவியை அளித்து அழகு பார்த்துள்ளனர்.
தமிழகத்தின் முதல் அரசுப் பேருந்து ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த வசந்தகுமாரி என்பது நினைவு கூறத்தக்கது.