பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை கைப்பற்ற வேண்டும் - பா.ஜனதா தேசிய செயற்குழுவில் முடிவு

First Published Apr 15, 2017, 9:52 PM IST
Highlights
First Congress should take up the panchayat


கிராம பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அடுத்த வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று புவனேஷ்வரில் நடந்துவரும் பாரதியஜனதா தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மேலும், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. இந்த சூழலில் கட்சியின் 2 தேசிய செயற்குழுக் கூட்டம் ஓடிசாமாநிலம் புவனேஷ்வரில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, 13 மாநில முதல் அமைச்சர்கள், 45 மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலைபுவனேஷ்வர் நகரம் வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செயற்குழு கூட்டம் நடந்த பின் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் அளித்த பேட்டியில் கூறுகையில், “ நாங்கள் 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, பா.ஜனதா உச்சத்தை அடையும் என்று மக்கள் கூறினார்கள். நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றபோது இதையே கூறினார்கள். 

ஆனால், தேசியதலைவர் அமித்ஷா இன்னும் கட்சி உச்சத்தை அடையவில்லை என்றார். பாரதிய ஜனதா கட்சி கிராமப் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை கைப்பற்ற வேண்டும் . சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள் தோல்விக்கான காரணத்தை ஏற்றுக்கொள்ளாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பின்னால் ஒளிகின்றன என்று தெரிவித்தார். 

கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா பேசுகையில், “ ஒவ்வொரு மாநிலத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் இருக்க வேண்டும். 2019ம் ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் நாம் அனைவரும் தயாராக வேண்டும்.

மக்களிடம் பாரதிய ஜனதா கட்சியை ஆழமாகக் கொண்டு செல்ல அடுத்த 95 நாட்களுக்கு நான் கேரளா, அந்தமான் ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அடுத்த 25 நாட்களுக்கு தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்.

கேரளா, திரிபுரா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா தொண்டர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு அமைதியாக பதிலடி கொடுப்போம். அங்கு தாமரையை மலரவைப்போம். உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட் தேர்தலில் நான்கில் 3 பங்கு இடங்களைக் கைப்பற்றி வெற்றியின் வார்த்தையை மாற்றிவிட்டோம்’’ என்று தெரிவித்தார்.

click me!