
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஆபாச வீடியோ ஒளிபரப்பானதால் பயணிகள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய நடைமேடைகளில் ரயில் வரும் நேரங்களை பகிர்வதற்காக எல்.ஈ.டி திரை வசதி சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ரயில் வரும் நேரங்களையும் புறப்படும் நேரங்களையும் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், நடைமேடையில் உள்ள ஒரு எல்.ஈ.டி திரையில் திடீரென ஆபாச வீடியோ ஓடியது.
இதை பார்த்த பயணிகள் சிலர் பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சிலர் அந்த வீடியோ கட்சியை செல்போனில் படம் பிடித்தனர். இந்த ஆபாச வீடியோ ஒரு நிமிடத்திற்கு மேலாக திரையில் ஓடியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.