
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறிய மற்றும் கடை நிலை விவசாயிகளுக்கு இலவசமாக உரம், விதைகள், பூச்சி கொல்லி மருந்துகள் வழங்கப்படும் இதன் மூலம் உற்பத்தி செலவையும், இழப்பையும் குறைக்க முடியும் என அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநில அ ரசின் வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீஸ் மும்பையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
சிறிய மற்றும் கடை நிலை விவசாயிகளுக்கு இலவசமாக உரம், விதைகள், பூச்சி கொல்லி மருந்துகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், விவசாயிகளின் உற்பத்திச் செலவு, இடுபொருள் செலவு குறையும். சந்தையில் உற்பத்தி பொருட்களுக்கு விலை குறைந்தாலும், அதிகமாக விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்.
ஏராளமான விவசாயிகள் கடனால் பாதிக்கப்பட்டுள்லனர். அவர்களை தேசிய ஊர வேலைவாப்புஉறுதியளிப்பு திட்டத்தில் அடுத்த 2 மாதங்களில் சேர்க்க உள்ளோம்.
உற்பத்தி பொருட்களுக்கு நல்ல தேவை இருக்கும் போது, விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். ஆனால், சில நேரங்களில் சந்தை விலை உற்பத்திச் செலவைக் காட்டிலும் சரியும்போது வாங்கிய கடனைக் கூட விவசாயிகளால் செலுத்த முடியாது.
அதற்காக விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அதிகப்படுத்த உள்ளோம். இதன்மூலம், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் நஷ்டமில்லாமல் தப்பிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.