
டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்ட பயங்கர தீயை அணைக்க 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
வெயில் காலம் குறைந்து வரும் நிலையில் சென்னையில் அடுத்தடுத்து பல இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தற்போது டெல்லியில் தொடர்கிறது.
சில நாட்களுக்கு முன்பு சென்னை திநகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அந்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து 7 மாடி முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதையடுத்து புதுபேட்டையில் வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
அதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது டெல்லி தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தரை தளத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அங்கிருந்து வெளியேற்றபட்டார்.
இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து 4 வாகனகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.