பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை பற்றிய திடீர் தீ...! 

 
Published : Oct 17, 2017, 09:55 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை பற்றிய திடீர் தீ...! 

சுருக்கம்

Fire Breaks Out At Prime Ministers Office 10 Fire Engines Rushed To Spot

பிரதமர் அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. திடீரெனப் பற்றிய இந்தத் தீ, 20 நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

புது தில்லி, ரெய்ஸினா ஹில்ஸ் பகுதியில் சௌத் ப்ளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 242ல் இன்று அதிகாலை சுமார் 3.35 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை அடுத்து தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தீயணைப்புத் துறை அதிகாரி குருக் குமார் சிங் கூறியுள்ளார். 

கணினியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் சேதங்கள், பாதிப்புகள் ஏற்பட்டது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

PREV
click me!

Recommended Stories

குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரிக்கும் பரம் வீர் சக்ரா வீரர்களின் படங்கள்!
அதிகாரிகளுக்கு அறிவே இல்ல.. Beef படத்துக்கு தடைவிதித்த மத்திய அரசுக்கு சசி தரூர் கண்டனம்!