மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிந்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் பற்றிய தீ தொடர்ந்து பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முடிந்த வரை போராடி உள்ளனர். இருப்பினும் மின்துறை ஊழியர்கள் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் மின்சார இணைப்பை துண்டித்த பிறகே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பணியை தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கேரள இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார்… உறுதிப்படுத்தியது மருத்துவ அறிக்கை!!
மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட சூழலில் சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள், புற சிகிச்சை நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்திருந்த உதவியாளர்கள் என பலரும் மருத்துவமனையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளனர். ஆனால், மக்கள் வெளியேற மருத்துவமனையில் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தீயணைப்பு வீரர்களுடன் உள்ளூர் மக்களும் தீயை அணைக்க உதவியுள்ளனர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 3 பேர் தீ விபத்தில் சிக்கி மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் எஸ்.பி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “468 மதுக்கடைகள் மூடல்.. அதிர்ச்சியில் குடிமகன்கள்” - அச்சச்சோ !
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவரது டிவிட்டர் பதிவில், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனித்து உள்ளதாக எண்ண வேண்டாம். ஒட்டுமொத்த மாநிலமும், நானும் உங்களுடன் இருக்கிறோம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.