கேரள இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார்… உறுதிப்படுத்தியது மருத்துவ அறிக்கை!!

By Narendran SFirst Published Aug 1, 2022, 8:40 PM IST
Highlights

திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த 22 வயது இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த 22 வயது இளைஞர் குரங்கு அம்மையால் தான் உயிரிழந்தார் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் குரங்கு அமைக்கு முதல் இறப்பு பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த 22 வயது இளைஞரை சோதனை செய்த போது அவரது உடலில் சிவப்பு புள்ளிகள் அல்லது கொப்புளங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், நோயாளிக்கு நோய் தொடர்பான பிற அறிகுறிகள் இருந்தன. நோயாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு வெளியேறியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இதையும் படிங்க: குரங்கு அம்மைக்கு கேரளாவை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு… இந்தியாவில் பதிவானது முதல் மரணம்!!

இதை அடுத்து சுகாதாரத் துறைக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனப் பிரிவில் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த நோயாளியின் ஸ்வாப் முடிவுகள் தெரிவிக்கப்படாததை அடுத்து அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து கேரள சுகாதாரத்துறை ஆராய்ந்து வந்தது. இந்த நிலையில் கேரளாவில் ஜூலை 30 அன்று உயிரிழந்த 22 வயது இளைஞனின் மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் குரங்கு அம்மை பாதிப்பு இருந்ததும் அவர் அதன் காரணமாக தான் உயிரிழந்தார் என்பதும் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: “468 மதுக்கடைகள் மூடல்.. அதிர்ச்சியில் குடிமகன்கள்” - அச்சச்சோ !

குரங்கு அம்மைக்க்கு இந்தியாவின் முதல் மரணம் இதுவாகும். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், ஜூலை 21 ஆம் தேதி அந்த நபர் வந்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உரையாடினார். அசாதாரணமான இழுப்பு, சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். ஆனால் அவருக்கு கொப்புளங்கள் அல்லது சொறி இல்லை. கண்டறியப்பட்ட மாறுபாடு மேற்கு ஆப்பிரிக்க மாறுபாடு ஆகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில், இது A2 மாறுபாடு மற்றும் மரபணு வரிசைமுறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. காரணத்தைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

click me!