அபராதம் போட்டே ரூ.100 கோடி கலெக்ஷனை அள்ளிய ரெயில்வே நிர்வாகம்...

 
Published : Nov 12, 2017, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
அபராதம் போட்டே ரூ.100 கோடி கலெக்ஷனை அள்ளிய ரெயில்வே நிர்வாகம்...

சுருக்கம்

Fines From Ticketless Travel Crosses Rs100 Crores In 7 Months Central Rai

டிக்கெட் இன்றி ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து, 7 மாதங்களில் ரூ.100.67 கோடி அளவிற்கு அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வே அறிவித்வித்துள்ளது.

அதிரடி சோதனை

ரெயில் பயணிகளுக்கு சிறந்த சேவை செய்வதற்கும் மற்றும் பயண சீட்டு இன்றி பயணம் செய்பவர்களை கட்டுப்படுத்தவும் மத்திய ரெயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் ரெயில் பயணிகளிடம் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ரூ.100 கோடி வசூல்

இதில், பயண சீட்டு இல்லாதவர்கள் மற்றும் கட்டணம் செலுத்திடாமல் பொருட்களை ஏற்றி செல்லுதல் ஆகியவற்றின் கீழ் 19.82 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதன்மூலம் ரூ.100.67 கோடி அளவிற்கு அபராத தொகையாக ரெயில்வே நிர்வாகத்திற்கு வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் ரூ.80.02 கோடி அளவாக இருந்தது. இது 25.81 சதவீதம் அதிக வருவாய் ஆகும்.

PREV
click me!

Recommended Stories

கீபேட் போன் இருந்தா போதும்.. பெண்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை விதித்த கிராமம்!
ஒரு லட்சம் ரூபாய்க்கு காண்டம் வாங்கிய சென்னை நபர்! மிரளவிட்ட ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ரிப்போர்ட்!"