
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று கூறிய ஒரு கருத்து இதுதான்.
இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் வங்கிகள் கிரெடிட், டெபிட் கார்டுகளை தயாரிப்பது குறைந்து முற்றிலும் அவை காணாமல் போகும். இனி அவை எல்லாம் செல்போன் மூலமே பரிவர்த்தனையை செய்ய திட்டமிட்டு வருகின்றன.
இனி வருங்காலத்தில் பயனாளர்களின் மொபைல் போன் செயலிகள் மூலமே அனைத்து பண பரிவர்த்தனைகளும் செய்யப்படும். இந்தியா இளைய வயதினர் அதிகம் கொண்ட நாடு. இந்தியாவின் மக்கள்தொகையில் 72 சதவீதம் பேர் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்களால் புதிய தொழில்நுட்பங்களை வேகமாகக் கற்றுக் கொள்ள முடிகிறது .
எனவே அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் படிப்படியாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தயாரிப்பது குறைக்கப்படும். வங்கிகளுடன் மொபைல் எண்கள் இணைக்கப்படுவதால் அனைத்து பரிவர்த்தனைகளும் இனி மொபைல் போன்கள் மூலமே நடைபெறும். இப்போதே இந்த டிரெண்ட் அதிகரித்துள்ளது.
உலகம் பொருளாதார நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்தியாவின் வளர்ச்சி ஆண்டுக்கு 7.5 சதவீதமாக இருக்கும். ஆனால் நமது வளர்ச்சி இலக்கு 9-10 சதமாக எதிர்பார்ப்பு உள்ளது... என்று கூறியுள்ளார்.