இஸ்லாமிய வங்கிகளுக்கு அனுமதி கிடையாது..! ரிசர்வ் வங்கி திட்டவட்டம்..!

First Published Nov 12, 2017, 5:35 PM IST
Highlights
no idea to permit islamic banks said reserve bank of india


இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதில்:

பரந்து விரிந்த அளவிலும், நாட்டில் அனைவருக்கும் வங்கி மற்றும் நிதி சேவையை பெறுவதில் சம வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இஸ்லாமிய வங்கி தொடங்க அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான நிதி சீர்சீர்திருத்த குழு, இஸ்லாமிய வங்கி தொடங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!