மரித்துபோன மனிதநேயம்; விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளம் சினிமா இயக்குநரிடம் கொள்ளையடித்த கூட்டம்!

By Ramya s  |  First Published Nov 2, 2023, 1:53 PM IST

டெல்லியில் விபத்தில் சிக்கிய இளைஞரை மருத்துவமனையில் சேர்க்க யாரும் முன் வராததால் அவர் சுமார் 30 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மனித நேயம் மரித்து போய்விட்டதற்கு என்பதற்கு உதாரணமாக டெல்லியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆம். விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க யாரும் முன் வராததால் அவர் சுமார் 30 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள பஞ்சஷீல் பூங்காவில் சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் 30 வயதான திரைப்பட இயக்குனர் பியூஷ பால் பைக் மற்றொரு பைக்கில் மோதி மரத்தில் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், அவரை சுற்றி பலர் கூடியிருந்தாலும், ஒருவர் கூட அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முன்வரவில்லை. மேலும் விபத்து நடந்த இடத்தில் பலர் வீடியோ எடுத்துக் கொண்டும், செல்ஃபி எடுத்துக் கொண்டும் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் அவரது உடைமைகளை திருடி சென்றதாக கூறப்படுகிறது...

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் அந்த சாலை வழியாக தனது சகோதருடன் சென்ற பங்கஜ் மிஸ்திரி அங்கு கூடியிருந்த பெரிய கூட்டத்தைக் கண்டு நிறுத்தினார். அப்போது விபத்து நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ந்து போன அவர், அங்கிருந்த சிலரின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பங்கஜ் மிஸ்திரி “சில மீட்டர் தொலைவில் ஒரு மனிதனைப் பார்த்தேன், தலையில் இருந்து பலத்த ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவருக்கு உதவவோ, ஆம்புலன்ஸையோ அல்லது காவல்துறையையோ அழைக்க யாரும் முன்வரவில்லை. ஒரு பைக் டாக்ஸி டிரைவர், உதவ முன் வைத்தார். அவர் ஆட்டோவை அழைத்து வந்த உடன், காயமடைந்திருந்தவரை ஏற்றி, நாங்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றோம், ஆனால் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததால், நாங்கள் அவரை பிஎஸ்ஆர்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்... அதற்கு மேலும் ஒரு மணி நேரம் ஆனது.  நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவரின் உடைமைகள் அவரிடம் இல்லை என்பதைக் கண்டறிந்தோம்." என்று கூறினார்

அன்றைய தினம் இரவு 9.45 மணியளவில் விபத்து நடந்த நிலையில் இரவு 10.11 மணியளவில் தான் அழைப்பு வந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். காவல்துறை அதிகாரி, டிசிபி சந்தன் சௌத்ரி இதுகுறித்து பேசிய போது “ சிசிடிவி காட்சிகளில் பியூஷ் பாலின் பைக் மோதியதைக் காட்டியது, பதர்பூரில் வசிக்கும் பண்டி (26). குர்கானில் ஒரு டிரைவர். பைக் இன்டிகேட்டர் இல்லாமல் திடீரென இடதுபுறம் திரும்புவதையும், பக்கத்தில் இருந்த மற்றொரு பைக்கில் மோதியதையும் காட்சிகள் காட்டுகிறது. இரண்டு வாகனங்களும் சமநிலையை இழந்து விபத்து நடந்துள்ளது.

கேரளா: ஒரே வாரத்தில் மற்றொரு நடிகை மறைவு.. 8 மாத கர்ப்பிணி.. பிரபல டாக்டருக்கு நேர்ந்த சோகம்

மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பண்டி மீது IPC பிரிவுகளின் கீழ், வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயலின் மூலம் காயம் ஏற்படுத்துதல்  தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பியூஷ் பால் அக்டோபர் 31 அன்று பால் இறந்த தகவல் கிடைத்தது. புதன் கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.

இதனிடையே பியூஸ், பாலின் நண்பர்கள் மற்றும் சகாக்கள், அவர் திரைத்துறையில் எப்படி ஆர்வமாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தனர். பாலின் நண்பரும் சக ஊழியருமான அபிஷேக் ஹல்தார், "பியூஷ் ஒரு பொறியியல் பட்டதாரி ஆனால் திரைப்படம் இயக்குவதில் அவருக்கு ஆர்வம் இருந்ததால், ஆவணப் படங்களை இயக்கி வந்தார். குர்கானை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் உள் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிவதற்கு முன்பு அவர் சில காலம் ஃப்ரீலான்ஸ் செய்து வந்தார்." என்று தெரிவித்தார்.

click me!