என்னது.. சச்சின் பைலட் மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாரா? வேட்பு மனுவில் வெளியான உண்மை..

By Ramya s  |  First Published Nov 2, 2023, 12:50 PM IST

காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், மனைவி சாராவை விவாகரத்து செய்ததை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

Congress leader Sachin Pilot and sara are divorced his election affidavit reveals Rya

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25ம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் பாஜகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், மனைவி சாராவை விவாகரத்து செய்ததை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தேர்தலுக்கான பைலட்டின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அவரின் மனைவியின் பெயருடன் "விவாகரத்து செய்யப்பட்டவர்" என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

46 வயதான பைலட், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுத் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் மகளான சாரா அப்துல்லாவிடம் இருந்து பிரிந்ததை வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஆரன், வெஹான் என 2 மகன்கள் உள்ளனர். சச்சின் பைலட் தனது பிரமாணப் பத்திரத்தில், தனது மகன்கள் இருவரும் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கடந்த ஐந்து ஆண்டுகளில் சச்சின் பைலட்டின் சொத்து கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பதையும் இந்த பிரமாண பத்திரம் காட்டுகிறது. 2018 ஆம் ஆண்டில், அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாய். 2023ல், அது 7.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சச்சின் பைலட் - சாரா காதல் :

சச்சின் பைலட்டும் சாராவும் லண்டனில் முதல்முறையாக சந்தித்தனர். சச்சின் பைலட் லண்டனில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தபோது, 1990களில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக சாரா அப்துல்லாவை அவரது தந்தை இங்கிலாந்துக்கு அனுப்பினார். சச்சின் பைலட்டின் தந்தை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட் ஃபரூக் அப்துல்லாவின் நெருங்கிய நண்பராக இருந்ததால், அவர்களது குழந்தைகள் லண்டனில் நண்பர்களாகிவிட்டனர். சச்சின் பைலட் லண்டனில் இருந்து வீடு திரும்பிய போது, சாரா தனது தாயுடன் அங்கேயே தங்கி, காங்கிரஸ் தலைவருடன் நீண்ட தூர உறவைப் பேணி வந்தார்.

இருவரும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தபோது, சச்சின் குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஃபரூக் அப்துல்லாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. சாரா முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும், சச்சின் குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது. ஃபரூக் அப்துல்லாவின் கட்சி உறுப்பினர்கள் மதங்களுக்கிடையேயான உறவின் காரணமாக அதிருப்தியடைந்ததுடன், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனினும் பல வருட போராட்டத்திற்கு பிறகு, சாராவும் சச்சினும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஐந்து மாநில தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை!

தொடர்ந்து தனது தந்தையை எதிர்த்து போராடி வந்த சாரா அப்துல்லா, தனது வீட்டை விட்டு ஓடிப்போய், சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, ஜனவரி 15, 2004 இல் இவர்களின் திருமணம் நடந்தது. சச்சினின் குடும்பம் கடைசியில் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் ஃபரூஅப்துல்லா குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், சாரா பைலட் விரைவில் தனது தந்தையுடனான தனது உறவை சரிசெய்து விட்டார். இந்த நிலையில் சச்சின் பைலட் சாராவை விவாகரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் 19 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வந்துள்ளது.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image