
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகு இழப்பீடு வழங்குவதை விட தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பருவ மழை பொய்த்து போனதால், கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் விவசாயம் முழுவதுமான முடங்கிவிட்டது. இதனால், உணவு பொருட்கள் விலைவாசி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும், விவசாய தொழில் பாதிப்படைந்துள்ளதால், விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுபோன்ற விவசாய பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வறட்சி உள்பட பல்வேறு பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன. ஆனால், இதற்கு மத்திய அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.. இதைதொடர்ந்து மத்திய அரசு, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்தது.
விவசாயிகள் தற்கொலை மற்றும் விவசாய இழப்பீட்டை முறைப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் தற்கொலையில் இழப்பீடு வழங்குவது மட்டும் தீர்வாக அமையாது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர், தற்கொலை சம்பவத்தை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க 12 திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்திருந்தது. இதன் மேல் நடவடிக்கை குறித்து, 2 வாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள், இந்த வழக்கை வரும் மார்ச் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.