
ஒரு குழந்தையின் பிறப்பு பதிவாகவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இறந்துபோன ஒருவரின் இறப்பு சான்றிதழை கொடுத்துள்ளனர். இதனால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியை சேர்ந்த ஒரு பெண், தனது குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு, அங்குள்ள பஞ்சாயத்து நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
குழந்தையின் பிறப்பு குறித்து அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. இதனால், அங்கிருந்த ஊழியர், அடுத்த நாள் வரும்படி கூறி, அந்த பெண்ணை திருப்பி அனுப்பினார். இதுபோல் பலமுறை பஞ்சாயத்து அலுவலகம் சென்றும், சான்றிதழ் கொடுத்தபாடில்லை.
இதனால், அதிருப்தி அடைந்த பெண், குழந்தையின் பிறப்பு குறித்து பதிவாக வில்லை என சான்றிதழ் தரும்படி கேட்டு வாக்குவாதம் செய்தார். அவரிடம் சமரசம் பேசிய அதிகாரிகள், அடுத்த நாள் வந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம் என கூறி அனுப்பி வைத்தனர்.
அதேபோல் அடுத்தநாள் காலை அந்த பெண், பஞ்சாயத்து அலுவலகம் சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், மிகவும் பணிவுடன் ஒரு கவரில் சான்றிதழை போட்டு கொடுத்து அனுப்பபினர்.
வீட்டுக்கு சென்ற அவர், கவரை பிரித்து பார்த்தபோது, கடும் அதிர்ச்சியடைந்தார். அதில், வேறு ஒருவர் மரணமடைந்ததற்ககான இறப்பு சான்றிதழ் என தெரிந்தது.
இதனால், ஆத்திரமடைந்த பெண், மீண்டும் பஞ்சாயத்து அலுவலகம் சென்று, அங்கிருந்த அதிகாரிகளை கேட்டுள்ளார். அதற்கு, தெரியாமல் தவறு நடந்துவிட்டது என கூறிய அவர்கள், குழந்தையின் பிறப்பு பதிவாகவில்லை என சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
'பிறப்பு பதிவாகவில்லை என்றபோது, விண்ணப்பத்தில் அந்த பெண் கொடுத்துள்ள விபரங்களை கூட பார்க்காமல், எப்படி இறப்பு சான்றிதழ் அளித்தனர்' என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.