
கவர்ச்சிகரமான வாகன எண்கள் வாங்குவதில் நம் அனைவருக்கும் விருப்பமே. அதனால் அதிக விலை கொடுத்து வாகனங்களுக்கான எண்களை பெறுவதில் முயற்சி செய்து வாங்கியும் வருகிறோம். அதுபோன்ற கவர்ச்சிகரமான எண்ணை 60 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்த நிகழ்வு துபாயில் நடந்துள்ளது.
துபாயில், கவர்ச்சிகரமான வாகன எண்களை சாலை போக்குவரத்து அதிகாரிகள், 2 மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விட்டு வருகின்றனர். இதேபோல், நேற்று முன்தினம், சாலை போக்குவரத்து அதிகாரிகள் 80 எண்களை ஏலம் விட ஏற்பாடு செய்தனர். இந்த ஏலத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏலத்தன்போது 'டி5' என்ற எண், அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டது. அதாவது 60 கோடி ரூபாய் மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டது. அதை எடுத்தவர் இந்திய தொழில் அதிபர் பல்விந்தர் சஹானி என்பவர் வாங்கியுள்ளார்.
கவர்ச்சிகரமான எண்களைச் சேகரிப்பதுதான் எனது பொழுதுபோக்கு என்றும் சஹானி கூறுகிறார். இதுபோல 10 எண்களை அதிக தொகைக்கும் அவர் வாங்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் இதுபோன்று இன்னும் நிறைய எண்களை வாங்கப்போவதாகவும் சஹானி கூறுகிறார். தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட 'டி5' எண்ணை தனது ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஒன்றுக்கு பயன்படுத்தப்போவதாகவும் பல்விந்தர் சஹானி கூறினார்.