பிரபல வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மறைவு… அதிர்ச்சியில் வானொலி நேயர்கள்!!

Published : Aug 13, 2022, 11:39 PM IST
பிரபல வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மறைவு… அதிர்ச்சியில் வானொலி நேயர்கள்!!

சுருக்கம்

பிரபல வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். 

பிரபல வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணஸ்வாமி மும்பையில் காலமானார். தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட சரோஜ் நாராயணஸ்வாமி, பிறந்து வளர்ந்து படித்தது அனைத்தும் மும்பையில் தான். அதன்பிறகு திருமணம் முடிந்து வானொலி பணிக்காக டெல்லியில் குடியேறினார். பணி ஓய்வுக்கு பின் மும்பையில் வசித்து வந்தார். 1962 முதல், 50 ஆண்டுகள், ஆல் இந்தியா ரேடியோவில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இதையும் படிங்க: குஜராத் முன்னாள் அமைச்சர் படுகாயம்… மாடு தாக்கியதில் காலில் எழும்பு முறிவு!!

வானொலி செய்தி வாசிப்பில் தனக்கென முத்திரை பதித்த தனி பாணியை அமைத்துக் கொண்டவர் சரோஜ் நாராயண சுவாமி. எந்த வார்த்தைகளுக்கு இடையே, இடைவெளி விட வேண்டும்; எந்த வார்த்தைக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து, குரல் கொடுத்தவர். தற்போதைய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் முன்னோடியாக இருந்த வானொலியில் இவரது குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இதையும் படிங்க: மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனத்தில் வேலை… காலி பணியிடங்கள் அறிவிப்பு!!

இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். ஒலிபரப்புத்துறையில் அவர் பணியாற்றியதை பாராட்டி இவருக்கு 2009ல் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87. சரோஜ் நாராயணஸ்வாமியின் மறைவு வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் கையெடுத்து கும்பிட்டு கதறல்..! மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு விளக்கம்