மூன்று கொடூர கொலைகள்.. 20 ஆண்டுகளாக இறந்துவிட்டதாக ஊரை நம்ப வைத்து கடற்படை ஊழியர் - வசமாய் சிக்கியது எப்படி?

By Ansgar R  |  First Published Oct 17, 2023, 11:41 PM IST

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவத்தில், சகோதரர்கள் இருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக எண்ணி, அதில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் காணாமல் போன நிலையில், அவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.


இந்நிலையில் 2004ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 20 ஆண்டுகளாக தனது மரணத்தை பொய்யாக்கிய 60 வயது முன்னாள் கடற்படை ஊழியர், அவரது உறவினரைக் கொன்று, இரண்டு தொழிலாளர்களை எரித்துக் கொன்ற குற்றத்திற்காக டெல்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் தற்போது 20 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்.

பாலேஷ் குமார் தனது பெயரை அமன் சிங் என மாற்றிக் கொண்டு குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில், நஜாப்கரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 2004 ஆம் ஆண்டு டெல்லியின் பவானா பகுதியில், பணத்துக்காக தனது மைத்துனரான ராஜேஷ் என்கிற குஷிராம் என்பவரைக் கொன்ற போது பாலேஷுக்கு வயது 40. மேலும் அவர் ராஜேஷின் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

Latest Videos

undefined

மாஃபியா பட பாணியில் போதைப்பொருள் தயாரிப்பு.. 2 சகோதரர்கள் பார்த்த பலே வேலை - சிக்கிய 100 கோடி மதிப்பிலான MD!

கடந்த 2004-ம் ஆண்டு ராஜேஷ் கொலையில் தொடர்புடைய பாலேஷின் சகோதரர் சுந்தர் லாலை போலீஸார் கைது செய்தனர். ஆனால், பாலேஷ் அவர்களிடம் இருந்து தப்பினார். சிறப்பு காவல் ஆணையர் (குற்றம்) ரவீந்திர யாதவ் கூறுகையில், அப்போது போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டிருந்த பாலேஷ், ராஜஸ்தானுக்கு லாரியில் தப்பிச் சென்றதாக கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவர் தனது டிரக்கை தீ வைத்து கொளுத்தி, தனது இரு தொழிலாளர்களை அதில் எரித்து கொன்ற்றுள்ளார். 
"ராஜஸ்தான் போலீசாரின் விசாரணையின் போது, இறந்த அந்த இரு நபர்களில் ஒருவர் பாலேஷ் என அடையாளம் கண்டுள்ளனர்,  பாலேஷின் குடும்ப உறுப்பினர்களும், அந்த உடல் அவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்". அவரது மரணத்தை போலியாகக் காட்டி, பாலேஷ் பஞ்சாபிற்கு தப்பிச் சென்று, தனது குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் போலி அடையாளச் சான்றினைப் பெற்று, தனது பெயரை அமன் சிங் என்று மாற்றிக் கொண்டார்.

"அவர் தனது மனைவியுடன் தொடர்பில் இருந்துகொண்டு, இந்திய கடற்படையின் காப்பீட்டு தொகை, மற்றும் அவரது ஓய்வூதியத்தை மனைவிக்கு மாற்றியுள்ளார். மேலும், ட்ரக் எரிந்ததற்கும் அவர் இன்சூரன்ஸ் பெற்றுள்ளது இப்பொது தெரியவந்துள்ளது. பின்னர் பலேஷ் தனது குடும்பத்துடன் டெல்லியின் நஜஃப்கருக்கு குடிபெயர்ந்து அவர்களுடன் வாழத் தொடங்கினார்.

இந்த சூழலில் தான் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அவர் இப்பொது பிடிபட்டுள்ளார். பாலேஷ் கைது செய்யப்பட்டது குறித்து ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள காவல்துறை அதிகாரியிடம், டெல்லி காவல்துறை தெரிவித்ததுடன், எரிக்கப்பட்ட லாரி வழக்கை மீண்டும் திறக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாய் கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் 100 கோடி மோசடி.! பாஜக ஓபிசி அணி செயலாளரை தட்டி தூக்கிய போலீஸ்- காரணம் என்ன.?

click me!