
மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் கலைக்கப்பட்டு, வேறு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற செய்திகள் வருகின்றன அதுகுறித்து உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பிஐபி நிறுவனம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளது.
இந்தியத் தயாரிப்பான இலகு ரக தாக்குதல் ‘பிரசந்த்’ ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைப்பு
சமீபத்தில் ஆங்கில நாளேடான டெக்கான் ஹெரால்டு, ஒரு செய்தி வெளியிட்டது. அதில் மத்திய அரசு விரைவில் சிறுபான்மை நலத்துறைக்கான அமைச்சகத்தை கலைக்க இருக்கிறது. அந்த அமைச்சகத்தை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் இணைக்க இருக்கிறது என்று செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி சிறுபான்மை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆளும் பாஜக தலைமையிலான அரசின் மீதான வெறுப்பையும், கோபத்தையும், மனக்கசப்பையும் அதிகப்படுத்தும் விதத்தில் இருந்தது. இந்த செய்தி குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்
இந்நிலையில் பிஐபி நிறுவனம் இந் செய்தி குறித்தும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், “ மத்திய அரசு தரப்பில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை. அந்த அமைச்சக்ததை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையுடன் இணைக்கும் எந்த முயற்சியும் இதுவரை நடக்கவி்ல்லை. அதற்கான திட்டம் ஏதும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து பிஐபி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி குறித்த அறிவிப்பை வெளியட்டு போலிச் செய்தி எனத் தெரிவித்துள்ளது. சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை கலைக்கும் திட்டமும் இல்லை, வேறு அமைச்சகத்துடன் இணைக்கும் திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.