ஈரான் பயணிகள் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்.. களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை விமானங்கள்.!

By Dhanalakshmi GFirst Published Oct 3, 2022, 1:06 PM IST
Highlights

பயணித்துக் கொண்டிருந்த ஈரான் பயணிகள் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஜோத்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் புறப்பட்டுச் சென்று பாதுகாப்பு அளித்தன.  
 

பயணித்துக் கொண்டிருந்த ஈரான் பயணிகள் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஜோத்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் புறப்பட்டுச் சென்று பாதுகாப்பு அளித்தன.  

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து விமானத்தை டெல்லியில் இறக்குவதற்கு ஈரான் நாட்டு விமானம் அனுமதி கோரியது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பிற்காக இந்திய விமானப்படையின் Su-30MKIபோர் விமானங்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டன. 

இதையும் படிங்க;- காந்தியை கொன்றவர்களுக்கு எதிராகத்தான் இந்த யாத்திரை.. கொட்டும் மழையில் கர்ஜித்த ராகுல் காந்தி.. மாஸ் பேச்சு.

பின்னர் ஈரான் ஜெட் விமானத்தில் வெடிகுண்டுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த விமானம் சீனா நோக்கி சென்று கொண்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஈரான் நாட்டு விமானத்தை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து இந்திய விமானப்படை எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவ் என்ற இடத்திற்கு சென்று கொண்டு இருந்தது. ஈரான் விமானம் பயணித்துக் கொண்டு இருந்தபோது, வெடிகுண்டு குறித்த தகவல் கிடைக்கவும், விமானத்தை டெல்லியில் இறக்குவதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இறக்காமல், ஜெய்ப்பூரில் இறக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஈரான் விமானத்தின் விமான ஓட்டி விமானத்தை இந்திய வான்பரப்பில் இருந்து வெளியே சென்றார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- gujarat opinion poll: குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், "இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் தகவல் கிடைத்ததும் ஈரான் விமானத்தை தொடர்ந்து சென்றன. பாதுகாப்பான தூர இடைவெளியில், சந்தேகத்திற்குரிய விமானத்தை தொடர்ந்து சென்றன. இருப்பினும், விமானம் சீனாவை நோக்கி தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. அச்சுறுத்தலைப் புறக்கணிக்குமாறு ஈரானிய ஏஜென்சிகள் எங்களை கேட்டுக் கொண்டனர். அது இந்திய வான்வெளியை விட்டு வெளியேறும் வரை நாங்கள் அதை நெருக்கமாக பின்தொடர்ந்தோம். விமானம் இப்போது இந்திய வான்வெளிக்கு வெளியே சென்றுவிட்டது'' என்றனர். சண்டிகரில் அல்லது ஜெய்பூரில் இறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டும், ஏன் அங்கு இறங்குவதற்கு விமானி விரும்பவில்லை என்ற சந்தேகத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

click me!