ஆக்ஸ்போர்டு டிக்‌ஸ்னரியில் இடம் பிடித்த ‘தமிழ் வார்த்தை’ ‘தல’ அஜித் பெயரை குறிப்பிட்டு விளக்கம்!

 
Published : Oct 26, 2017, 05:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
ஆக்ஸ்போர்டு டிக்‌ஸ்னரியில் இடம் பிடித்த ‘தமிழ் வார்த்தை’  ‘தல’ அஜித் பெயரை குறிப்பிட்டு விளக்கம்!

சுருக்கம்

Explain the name of the word Thala Ajith in Oxford dictionary

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்‌ஸ்னரி சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டதில் ‘அண்ணா’(மூத்த சகோதரர்), என்ற தமிழ் வார்த்தை விளக்கத்தோடு சேர்க்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக தெலுங்கு, குஜராத்தி, உருது இந்தி ஆகியவற்றில் இருந்து 70 இந்திய வார்த்தைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் வார்த்தை

இதில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள ‘அண்ணா’ என்ற தமிழ் வார்த்தைக்கு முன்பு,டிக்‌ஸ்னரியில் ‘அணா’ என்ற வார்த்தை இடம் பெற்று இருந்தது. அணா என்பது இந்தியா, பாகிஸ்தான் நாடு பிரியாமல் இருக்கும் போது, பயன்படுத்தப்பட்ட நாணயத்தின் மதிப்பாகும்.

அதன்பின் தற்போது ‘அண்ணா’ என்ற தமிழ் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு ஆண் ஒருவரை மரியாதையுடன் அழைப்பது, மேலும், ஒரு குடும்பத்தில் மூத்த சகோதரரை அண்ணா என்று அழைக்கலாம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. 

உதாரணம் என்ற  இடத்தில், “ நான் அஜித் அண்ணனுடன் நடிக்கப் போகிறேன்’ என்று அண்ணாவுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. 

இந்திய வார்த்தைகள்

மேலும், ‘அபா’ என்ற உருது வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியில் ‘அச்சா’, ‘பாபு’, ‘படா தின்’, ‘பச்சா’, ‘சூர்ய நமஸ்கார்’ ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ள வார்த்தைகளில் பெரும்பாலானவை கலாச்சாரத்தையும், உறவுகளையும், உணவுகளையும் குறிப்பிட்டுள்ளதாக அமைந்துள்ளன.

ஆயிரம் வார்த்தைகள்

இது குறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில டிக்ஸ்னரி எழுதிய டானிகா சலாஜர் கூறுகையில், “ இந்திய மொழியில் இருந்து 70 வார்த்தைகள் தொகுக்கப்பட்டு டிக்சனரியில் சேர்த்துள்ளோம். இது தவிர 900 வார்த்தைகள் ஏற்கனவே இருக்கின்றன. இந்திய பேச்சு வழக்கில் கடைபிடிக்கப்படும் மரபுமுறைகள், உறவுமுறைகள், குடும்ப உறவுகள் மிகவும் குழப்பமானது. அதற்கு ஆங்கிலத்தில் நேரடியான அர்த்தம் இல்லை.  இந்திய வார்த்தைகளை சேர்க்கும் போது அந்த இடைவெளியை நிரப்பும்’’ என்றார்.

ஆக்ஸ்போர்டு நிறுவனம் ஆண்டுக்கு மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தங்களின் டிக்ஸ்னரியை அப்டேட் செய்வார்கள். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 1000 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

திருப்பதி: திருமலை போகிறீர்களா? தரிசனத்தில் திடீர் மாற்றம்! பக்தர்கள் கவனத்திற்கு!
நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்