‘டாக்டர் ஜெட்லி, பொருளாதாரத்தை ஐ.சி.யு.வில் படுக்கவச்சிட்டிங்களே’ ராகுல் காந்தி கிண்டல் ‘டுவிட்’

First Published Oct 26, 2017, 4:35 PM IST
Highlights
Doctor Jaitley note ban and GST put the economy in ICU


டாக்டர் ஜெட்லி, நீங்கள் கொண்டு வந்த ரூபாய் நோட்டுதடை நடவடிக்கையாலும், ஜி.எஸ்.டி. வரியாலும் நாட்டின் பொருளாதாரத்தை அவசர சிகிச்சை மையத்தில் ஆபத்தான நிலையில் படுக்கவைத்து விட்டீர்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக டுவிட்டரில் செய்துள்ளார்.

வார்த்தைப் போர் 

ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி குறித்து காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ‘ ஜி.எஸ்.டி’ வரி என்பது, மக்களிடம் பணத்தை கொள்ளையடிக்கும் ‘கபார் சிங் வரி’ என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். 

மேலும், ரூபாய் நோட்டு தடை  அறிமுகப்படுத்த நவம்பர் 8-ந் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதற்கு பதிலடியாக கறுப்புபணத்துக்கு எதிரான நாளாக கடைபிடிக்க பா.ஜனதா கட்சி அறிவித்தது.  

டுவிட்டர்

இரு கட்சிகளுக்கு இடையே கடும் வார்த்தைப் போர் உருவாகியுள்ள நிலையில், அரசின் பொருளாதார கொள்கைகளை கிண்டல் செய்து ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

"ஆபத்தான நிலையில் பொருளாதாரம்"

डॉ जेटली, नोटबंदी और GST से अर्थव्यवस्था ICU में है।

आप कहते हैं आप किसी से कम नहीं,
मगर आपकी दवा में दम नहीं

— Office of RG (@OfficeOfRG)
டாக்டர் ஜெட்லி, நாட்டின் முன்னேற்றத்துக்கு எனக் கூறி நீங்கள் கொண்டுவந்த ரூபாய் நோட்டு தடை, ஜி.எஸ்.டி. வரி ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை  மிகவும் மோசமாக்கி அவசர சிகிச்சை மையத்தில் படுக்க வைத்துவிட்டது.

Dear Mr. Jaitley, May the Farce be with you. pic.twitter.com/Dxb5jFCaEa

— Office of RG (@OfficeOfRG)

இனி பொருளாதாரம் மிகவும் மந்தமாகவே இயல்பு நிலைக்கு திரும்பும். அதற்கு சிறப்பான, தரமான மருத்துவ சிகிச்சை தேவை. நீங்கள் அளித்த மருந்து ஒன்றும் வேலை செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

click me!