மசோதாக்கள் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். விரிவான ஆலோசனைக்குப் பிறகு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்.
காலனித்துவ கால இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய நிலையில், பல சட்ட வல்லுநர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கின்றனர். நூற்றாண்டு பழமையான குற்றவியல் சட்டங்ககளில் இத்தகைய திருத்தங்கள் தேவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் காலத்துச் சட்டங்களை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த மூன்று மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 ஆகியவை வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் ஆய்வுக்காக நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ஷா தெரிவித்தார்.
இந்த மசோதாக்கள் பற்றி முன்னாள் மத்திய சட்டச் செயலர் பிகே மல்ஹோத்ரா கூறுகையில், ஐபிசி, எவிடன்ஸ் சட்டம் மற்றும் சிஆர்பிசி ஆகிய மூன்றுக்கும் பதிலாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதாக்கள் குற்றவியல் நீதித்துறையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம் என்கிறார்.
திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை! அமித் ஷா அறிமுகப்படுத்திய புதிய மசோதா!
"இதுவரை செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சட்ட ஆணைய அறிக்கைகள் மற்றும் நீதிபதி மலிமத் கமிட்டி அறிக்கைகள் உட்பட பல அறிக்கைகள் இருந்தபோதிலும், சாமானியர்களுக்கான நீதி என்பது வெகு தொலைவில் உள்ளது. சிறிய குற்றங்களுக்காக விசாரணையை எதிர்கொள்ளும் நபர்கள் நீண்ட காலமாக விசாரணைக் கைதிகளாக சிறைகளில் உள்ளனர்" என அவர் தெரிவிக்கிறார்.
"சிறிய குற்றங்களுக்கு தண்டனைக்குப் பதில் சமூக சேவை செய்ய வைப்பது, நீதி வழங்கும் முறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் கடுமையான குற்றங்களுக்கான தண்டனையை நியாயப்படுத்துதல் போன்ற நடைமுறை மாற்றங்களால், நீதி வழங்கல் மிக விரைவாகவும் சீர்திருத்தம் சார்ந்ததாகவும் இருக்கும்" எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா கூறுகையில், இந்த சட்டங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும் அவற்றில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்றும் சொல்கிறார்.
ஆயிரம் 5 லட்சமாக மாறும்! ஆண்களுக்கு மட்டும் அஞ்சல் துறை வழங்கும் பொன்மகன் சேமிப்புத் திட்டம்!
"மூன்று பெரிய கிரிமினல் சட்டங்களும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டவை. அவற்றில் திருத்தங்கள் தேவைப்பட்டன. ஒரு குற்றவியல் வழக்கறிஞராக, விசாரணையின் நடைமுறை, தண்டனைக் குற்றங்களின் வரையறைகள் மற்றும் சாட்சியச் சட்டம் ஆகியவை பழமையானவை என்று உணர்கிறேன். அவற்றில் தீவிரமான மாற்றங்கள் தேவை. நவீன இந்தியாவுக்கு ஒத்திசைவாக உள்ள இருக்க வேண்டும். இந்த வழியில் உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் நம் நாட்டின் குற்றவியல் நீதி அமைப்புக்கு சாதகமாக இருக்கும். இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதை நான் வரவேற்கிறேன்." என்கிறார் விகாஸ் பஹ்வா.
முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த மூன்று மசோதாக்களும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை என்றும், இவை இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பை வலுப்படுத்தும் என்றும் கருதுகிறார்.
பாரதிய நியாய சன்ஹிதா 2023 இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860 க்கு மாற்றாக முன்வைக்கப்பட்டுள்ளது. பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. பாரதிய சாக்ஷ்யா மசோதா 2023 இந்திய சாட்சியச் சட்டம் 1872 க்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் தண்டனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை அல்ல, நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்கிறார். விரிவான ஆலோசனைக்குப் பிறகு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்.
சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!
தேச துரோகத்தை ரத்து செய்தல், கும்பல் கொலைக்கு எதிரான புதிய தண்டனைச் சட்டம், சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை மற்றும் முதல் முறையாக சமூக சேவையை சிறிய குற்றங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாகச் சேர்ப்பது ஆகியவை இந்த மசோதாக்களின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன என மத்திய அரசு விளக்குகிறது.
ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள், தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கான தண்டனைகளும் புதிய மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.