Exclusive : அக்னிபத் திட்டம் வரவற்கத்தக்கது! - இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது!!

By Dinesh TGFirst Published Jun 29, 2022, 12:37 PM IST
Highlights

அக்னிபத் திட்டம் ஏராளமான மக்களால் புரிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, ஏராளமான இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து வருவதே இதற்கு சான்று என IAFக்கான விமான அதிகாரி-பொறுப்பாளர் ஏர் மார்ஷல் சூரஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.
 

ஏசியாநெட் நியூஸ்-ன் 'சம்வாத்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை IAFக்கான விமான அதிகாரி-பொறுப்பாளர் ஏர் மார்ஷல் சூரஜ் குமார் ஜா கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், அக்னிபத் திட்டம் மிகச்சிறப்பான ஒன்று என்றும் வரவேற்கத்தக்கது என்றார். போராட்டங்கள் மெல்ல மெல்ல அடங்கி தற்போது மக்கள் அக்னிபத் திட்டத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஏராளமான இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர விண்ணப்பித்து வருவதே இதற்கு சான்று என்றார்.

அக்னிபத் திட்டத்தில் குறிப்பாக விமான படைப்பிரிவுக்கு இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அபரிமிதமானக இருப்பதாகவும், விண்ணப்பதிவு தொடங்கிய இந்த 4 நாட்களில் சுமார் 1.5 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த அக்னிபத் திட்டத்தின் வீரர்கள், அக்னிவீர் வாயு என அழைக்கப்படுவர் என்று தெரிவித்த ஏர் மார்ஷல், முக்கிய படை அதிகாரிகளுக்கு கீழே உள்ள வீரர்களின் வயதை குறைக்க எதிர்பார்ப்பதாகவும், அவர்களினம் துடிப்பும், உத்வேகமும் இருக்கும் என்றார். மேலும், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பம், கல்வி, சேவை என அனைத்திலும் முன்னணியில் இருப்பதால், அதிநவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்றார்.

30 ஆண்டுகால போராட்டம்

அக்னிபத் திட்டத்தை செயல்படுத்த 30 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டது ஏன் என்ற கேள்விவிக்கு பதிலளித்த ஏர் மார்ஷல், இது ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பு, பல்வேறு பழைய சித்தாந்த கருத்துகளை உடைத்தெறிகிது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல்வேறு போராட்டங்கள் வெடித்ததை அனைவரும் அறிவோம், அனைத்திற்கும் மேலாக, முப்படைகளும் ஒரு குறிப்பிட்ட வழிமுறையில் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய புரட்சிகரமான மாற்றத்தை ஒரு தீர்க்கமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒரு சரியான தருணத்தில் மட்டுமே இதுபோன்ற பெரிய திட்டத்தை தொடங்க முடியும்.

அக்னிபத் திட்டம், திறமையான மனித வளத்தை உருவாக்கும் முயற்சி - Naukri நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கருத்து

பிரகாசமான எதிர்காலம்

அக்னிவீரர்களுக்கான பணிக்காலம் ஏன் நான்கு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது என்று கேட்டதற்கு, "நான்கு ஆண்டுகள் மிகவும் சிறந்தது, நாங்கள் 17.5 முதல் 23 வரை எடுத்துக்கொள்கிறோம், அதாவது வயதானவர் வெளியே செல்வார்.அதிகபட்சமாக 4 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் வெளியே செல்லும் போது அவரது வயது 27ஆக இருக்கும். இவருக்கு மற்ற துறைகளிலும் அரசு, தனியார், அமைப்பு மற்றும் அமைப்புசாரா துறைகளில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

பெண்களுக்கான வாய்ப்பு!

IAF-ல் இளம் பெண்களுக்கான வாய்ப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, ஏர் மார்ஷல் ஜா கூறியதாவது, இந்தியக் கடற்படையைப் போலவே அவர்களையும் விமானப் படையில் சேர்ப்பதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார். "இந்த முறை பெண்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும், ஒரு விரிவான ஆய்வு நடந்து வருவதாகவும் தெரிவித்தார். ஆய்வு ஏறக்குறைய முடிந்துவிட்டது, விரைவில் அது உயர் தலைமைக்கு வழங்கப்பட்டு அனுமதி கிடைத்தவும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

click me!