India corona : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் டிசம்பர் மாத இறுதியிலும் ஜனவரி மாதத்திலும் தீவிரமாக இருந்தது. பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு மீண்டும் அமலுக்கு வந்தது. பின்னார் பிப்ரவரி மாதம் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களாக பதிவாகி வருகிறது.
மேலும் படிக்க:அடக்கடவுளே... மருத்துவ கல்லூரி மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 17,336 பேருக்கும், நேற்று 11,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 14,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,33,345 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:India Corona: மீண்டும் கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா.. கிடுகிடுவென உயரும் பாதிப்பு.. பீதியில் பொதுமக்கள்..!
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 11,574 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,28,08,666 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை இந்தியாவில் 99,602 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 30 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,020 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 1,97,46,57,138 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,44,788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:TN Corona: தமிழகத்தில் இன்று 1,461 பேருக்கு கொரோனா… 697 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!