ncert:ஆன்-லைன் கல்வி சிரமம்! தேர்வுகளும், முடிவுகளும் பள்ளி மாணவர்களுக்கு பதற்றம்: என்சிஇஆர்டி ஆய்வில் தகவல்

Published : Sep 07, 2022, 12:40 PM IST
ncert:ஆன்-லைன் கல்வி சிரமம்! தேர்வுகளும், முடிவுகளும் பள்ளி மாணவர்களுக்கு பதற்றம்: என்சிஇஆர்டி ஆய்வில் தகவல்

சுருக்கம்

ஆன்-லைனில் கல்வி கற்பது சிரமமாக இருக்கிறது என்றும், தேர்வுகளும், முடிவுகளும்தான் பதற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் பதற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று என்சிஇஆர்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்-லைனில் கல்வி கற்பது சிரமமாக இருக்கிறது என்றும், தேர்வுகளும், முடிவுகளும்தான் பதற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் பதற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று என்சிஇஆர்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவல் வந்தபின் இதுவரை இல்லாத புதிய கற்றல் முறைக்கு பள்ளி மாணவர்கள் மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். ஆசிரியர்களுடன் நேரடி உரையாடி கல்வி கற்கும் முறை மாறி, ஆன்லைனில் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். 

பஞ்சாப் அரசின் கஜானா காலி! அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவிப்பு

இந்த ஆன்லைன் கல்விமுறை நகர்ப்புறங்கள், சிறிய நகரங்கள், இணைய வசதியுள்ள நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைத்தது. ஆனால், இணையதளம் வசதி இல்லாத, ஸ்மார்ட்போன் இல்லாத, மடிகணினி இல்லாத குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. 

இந்த ஆன்லைன் கல்விமுறையால், மாணவர்களுக்கு கல்விமீதிருக்கும் இடைவெளி குறையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டதே தவிர, நேரடி கல்வி முறை போன்று தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கொரோனாவுக்குப்பின் மாணவர்களின் மனநிலை, பழக்கம் ஆகியவற்றிலும் பெரிதாக மாற்றம் ஏற்பட்டது.
பள்ளி மாணவர்களின் மனநிலையி்ல் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும், அவர்களின் நலன் குறித்தும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி) ஆய்வு நடத்தியது. நாடுமுழுவதும் 3.90 லட்சம் மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. 

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளவது எப்படி..? முழு விவரம்

என்சிஇஆர்டியில் உள்ள மனோதர்பன் பிரிவு சர்வே செய்து மாணவர்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ளமாற்றம், நலன் குறித்து முடிவுகளை வெளியிட்டுள்ளது. 6 முதல் 8வயதுள்ள மாணவர்கள், 9 முதல் 12 வயதுள்ள மாணவர்கள், பதின்வயதினர் எனப் பிரித்து 2022, ஜனவரி முதல் மார்ச் வரை சர்வே செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 73% மாணவர்கள் தங்கள் பள்ளி வாழ்க்கை மனநிறைவாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 45% மாணவர்கள் தங்களின் உடல்அமைப்பு குறித்து மனநிறைவாக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

29சதவீத மாணவர்கள் தங்களின் படிப்பு கவனம் சிதறுகிறது என்றும், 43 சதவீதம் பேர், 6 முதல் 12ம் வகுப்புக்குச் செல்லும்போது, தங்களின் மனநிலையில் ஒருவிதமான ஊசலாட்டம் நிலவுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

Bengaluru:Bangalore floods: வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: காங்கிரஸ்தான் காரணம்: கர்நாடக முதல்வர் மழுப்பல்

மாணவர்கள் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும்போது தனிப்பட்ட மற்றும் பள்ளி வாழ்க்கையில் மனநிறைவு குறைகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலையில் தன்னை முன்னிறுத்தும் அடையாளம் தேடிக் கொள்வதில் நெருக்கடி, சவால்கள், உறவுகள் மீதான அதிகரித்த உணர்திறன், நண்பர்கள் குறித்த அழுத்தம், தேர்வு பயம், கவலை மற்றும் நிச்சயமற்ற தன்மை, மாணவர்களின் எதிர்கால சேர்க்கை ஆகியவை நெருக்கடி ஏற்படுத்துகிறது

மாணவர்களின் மனநிலன், மற்றும் நல்வாழ்வுக்கு பங்களிக்கும் அம்சங்களில் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. மாணவர்களின் தங்களைப் பற்றிய கருத்துக்களையும், உணர்வுகள், கல்வியாளர்கள், உறவுகள், சகாக்கள், உணர்ச்சிகளை நிர்வகித்தல், சவாலான சூழ்நிலைகளைக் கையாளுதல் போன்றவற்றின் பின்னணியில் மற்றவர்கள் அவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் இந்த ஆய்வு குறிக்கிறது.

பள்ளி மாணவர்களில் 81 சதவீதம் பேர் தேர்வுகளும், தேர்வுகளைத் தொடர்ந்து வரும் முடிவுகளும்தான் தங்களின் பதற்றத்துக்கு மிகப்பெரிய காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

43 சதவீத மாணவர்கள் விரைவாக எந்த சூழலுக்கும் தங்களை தகவமைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளனர், இதில் 46சதவீத நடுத்தர வயதுள்ள மாணவர்களும்,41 சதவீதம் உயர்நிலை மாணவர்களும் அடங்கும்

ncrb:முதியோர் கொலையில் தமிழகம் முதலிடம் ! வயதானவர்கள் வாழ தகுதியில்லாதவர்களா? என்சிஆர்பி அதிர்ச்சித் தகவல்

மாணவர்களில் 51சதவீதம் பேர் ஆன்லைனில் கல்வி கற்பது மிகுந்த சிரமாக இருக்கிறது என்று தெரிவித்துள்றனர். அதிலும் 28 சதவீதம் பேர் ஆன்லைனில் ஆசிரியர்கள் கேள்வி கேட்கும்போது தங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

யோகா, தியானம், கட்டுரைகள் எழுதவைத்தல், நாளேடுகளில் கட்டுரை எழுதவைத்தல், உள்ளிட்ட புதிய உத்திகள் மூலம் மாணவர்களின் மன அழுதத்தைக் குறைக்க முடியும். 

அதுமட்டும்மல்லாமல் மற்றவர்களுக்குஉதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்தல், சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுதல், உறவுகளை பராமரித்தல், பேணுதல் ஆகியவையும் மனஅழுதத்தில் இருந்து விடுபட இயலும். 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!