லட்டு செய்வது முதல் தரிசனம் வரை அனைத்தும்.. திருப்பதி பற்றி எல்லாமே தெரிஞ்சிக்கனுமா? - நாளைக்கு நேஷனல் ஜியோகிராபிக் சேனல் பாருங்க...

 
Published : Mar 26, 2017, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
லட்டு செய்வது முதல் தரிசனம் வரை அனைத்தும்.. திருப்பதி பற்றி எல்லாமே தெரிஞ்சிக்கனுமா? - நாளைக்கு நேஷனல் ஜியோகிராபிக் சேனல் பாருங்க...

சுருக்கம்

Everything about the Tirupati Laddu terincikkanuma to the first vision? National Geographic Channel and see tomorrow

இந்தியாவில் எத்தனை கோவில்கள் இருந்தாலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட கோவிலில் தினமும் நடக்கும் நிகழ்ச்சி நிரல்களின் ஏற்பாடுகள் குறித்து நேஷனல் ஜியோகிராபிக் சேனல் நாளை ஒளிபரப்ப உள்ளது.

உலக மக்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சேனல் நேஷனல் ஜியோகிராபிக். இந்த சேனல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 60 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த சேனல் திருப்பதி ஏழுமலையானின் பெருமைகள் குறித்தும், தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும், திருப்பதியை சுற்றிய இயற்கை வளம், குடிநீர், அன்னதான முறைகள், வாடகை அறைகள் வழங்குவது, சந்தன மரங்களின் நடவு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒன்றரை மணி நேர ஆவணப்படமாக தயாரித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்காக கடந்த ஆறு மாதகாலமாக இந்த சேனலின் இயக்குனர், தயாரிப்பாளர், கேமராமேன் என 5 பேர் கொண்ட குழுவினர் திருப்பதியிலேயே தங்கி ஏழுமலையானின் அரிய தகவல்களை சேகரித்து படபிடிப்பு வேலைபாடுகளை மேற்கொண்டனர்.

இந்த திருப்பதி ஏழுமலையானின் பெருமைகள் குறித்த ஆவணப்படத்தை பார்த்து அதிகாரிகள் அனுமதி அளித்தமையால் நாளை இரவு 9 மணிக்கு நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் ஒளிபரப்பப்பட உள்ளது.

குறிப்பாக திருப்பதிக்கே பேர் போன திருப்பதி லட்டு குறித்த அனைத்து விஷயங்களையும் ஒளிபரப்ப போறாங்களாம். பார்க்க மிஸ் பண்ணாதிங்க...

PREV
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!