
குஜராத்தில் மீண்டும் வெடித்த மத கலவரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் உள்ளது வடவள்ளி கிராமம்.. இங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளியின் சுவற்றியில் இரண்டு இளைஞர்கள் ஏறினர். இதில் ஒருவர் கீழே விழ இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.பின்னர் அது கைகலப்பாக மாறியது.
இவ்விவகாரம் இருவரின் கிராமங்ளுக்குத் தெரியவர சிறிய பிரச்சனை மதத் கலவரமாக வெடித்தது. இதில் 50 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளையும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
பதற்றத்தை தணிக்க ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் வடவள்ளி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்