வேலைய ஆரம்பிச்சிட்டாங்கப்பா …. அயோத்தியில ராமர் கோயில் கட்டப்போகுதாம் வி.ஹெச்.பி…

 
Published : Mar 26, 2017, 08:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
வேலைய ஆரம்பிச்சிட்டாங்கப்பா …. அயோத்தியில ராமர் கோயில் கட்டப்போகுதாம் வி.ஹெச்.பி…

சுருக்கம்

pravin togadiya

வேலைய ஆரம்பிச்சிட்டாங்கப்பா …. அயோத்தியில ராமர் கோயில் கட்டப்போகுதாம் வி.ஹெச்.பி…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை விரைவில் தொடங்வுள்ளதாக விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் சர்வதேச பொது செயலாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வுகாண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் பல்வேறு தரப்பினர் இதற்கு எரிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்து அங்கு இந்த தீவிர ஆதரவாளர் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் அவர்கள் ராமர் கோவில் கட்டும் பிரச்சனையை மீண்டும் எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் சர்வதேச பொது செயலாளர் பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் கட்டும் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு உச்சநிதிமன்றம் கூறியிருப்பதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்றவேண்டும் என்று கூறினார்.

அதற்கு இதுவே சரியான நேரம் என்றும்  விசுவ இந்து பரி‌ஷத்தின் சித்தாந்தத்தால்தான் அண்மையில்  உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு காரணம் என்றும் தொகாடியா தெரிவித்தார்..

ராமர் கோவில் கட்டுவதற்கு தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்கிற எங்களது லட்சியத்தை வலியுறுத்தி ராம் மந்திர் நிர்மாண் சங்கல்ப’ என்னும் புதிய இயக்கத்தை வரும்  ஏப்ரல் 3–ந் தேதி தொடங்க உள்ளதாகவும் விசுவ இந்து பரி‌ஷத் அமைப்பின் சர்வதேச பொது செயலாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நண்பேண் டா..! இந்தியாவுக்காக உதவ மீண்டும் முன்வந்த புடின்..! ரஷ்யாயாவுடன் பிளாக்பஸ்டர் ஒப்பந்தம்..!
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய ஜெய்ஷ்-இ-முகமது பெண்..! பாகிஸ்தானை அம்பலப்படுத்தப்போகும் ஷாஹ்னாஸ் அக்தர்..!