கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டு.. மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி தப்புமா?

By Ramya sFirst Published Dec 8, 2023, 1:35 PM IST
Highlights

கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பான நெறிமுறைக்குழுவின் அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டு திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது புகார் எழுந்தது. மேலும் மக்களவை உறுப்பினர்களின் போர்ட்டலின் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை வெளியில் உள்ள நபர்களுக்கு பகிர்ந்து வெளிநபர்கள் பாராளுமன்றத்தின் இணையதளத்தை மஹுவா மொய்த்ரா அனுமதித்ததாகவும்  குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது

நெறிமுறையற்ற நடத்தைக்காகவும், சட்டத்தை அவமதித்ததற்காக மஹூவா மொய்த்ராவை ” 17வது மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவையின் நெறிமுறைகள் குழு பரிந்துரைத்துள்ளது. அவரின் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பாஜகவின் மத்தியப் பிரதேச எம்பி வினோத் குமார் சோன்கர் தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில், “மஹூவா மொய்த்ராவின் மிகவும் ஆட்சேபனைக்குரிய, நெறிமுறையற்ற, மற்றும் குற்றச் செயல்கள் குறித்து அரசாங்கத்தின் தீவிர, சட்ட, விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. எனினும் இந்த குழுவின் பரிந்துரைக்கு ஆதரவாக மக்களவையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் வாக்களித்தால் மட்டுமே மொய்த்ராவை வெளியேற்ற முடியும்.

எவ்வாறாயினும், மொய்த்ராவுக்கு எதிரான லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளில், நாடாளுமன்றக் குழு அரசாங்கத்தின் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளது. “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் மீது விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் பாஜகவின் விஜய் சோங்கர் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் இந்த அறிக்கை விவாதம் நடத்தப்பட்டு பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

இனி அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை..? வங்கி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய குட்நியூஸ்..

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த எம்.பி.யான மஹூவா மொய்த்ரா, பில்லியனர் தொழிலதிபர் கௌதம் அதானி தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் உதவி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அக்டோபர் 15 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், பின்னர் அவர் இந்த விஷயத்தை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!