81 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு: ஐதராபாத் நிஜாமின் சொத்துக்களை கோரிய பாகிஸ்தானுக்கு பலத்த அடி: இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி

By Selvanayagam PFirst Published Oct 3, 2019, 6:11 AM IST
Highlights

கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா பிரிக்கப்பட்டபோது, ஐதராபாத் நிஜாம் லண்டன் வங்கியில் டெபாசிட் செய்திருந்த 10 லட்சம் பவுண்ட்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என தீர்ப்பளித்த இங்கிலாந்து உயர் நீதிமன்றம், இந்தயாவுக்கும், நிஜாமின் வாரிசுகளுக்கும்தான் முழு உரிமை எனத் தெரிவித்துள்ளது

ஏறக்குறைய 81 ஆண்டுகளுக்குப்பின் இந்த வழக்கில் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது லண்டன் உயர் நீதிமன்றம்
ஜதராபாத் நிஜாமின் வாரிசுகளான இளவரசர் 8-வது நிஜாம் முகாராம் ஜா, அவரின் சகோதரர் முபாகாம் ஜா ஆகியோர் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஐதராபாத் நிஜாம் தனது காலத்தில் 10லட்சத்து7 ஆயிரத்து490 பவுண்ட்களை இங்கிலாந்தில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் டெபாசிட் செய்திருந்தார். கடந்த 1948-ம் ஆண்டு ஐதராபாத் நிஜாம் பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டபோது, இந்த 10,7490 பவுண்ட்களை லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரத்துக்கு அனுப்பினார். அந்த தொகை அப்போது எடுக்க தடைவிதித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த தொகை தற்போது 3.50 கோடி(ரூ.306 கோடி)பவுண்ட்களாக வளர்ந்துவிட்டது.

இந்த தொகை தங்களுக்கு அனுப்பப்பட்ட தொகை என்று பாகிஸ்தானும், ஐதராபாத் நிஜாம் வாரிசுகள் இந்தியா பிரிக்கப்பட்டு அனுப்பிய பணம் என்பதால், அது இந்திய அரசுக்கும், தங்களுக்கும் சொந்தம் என்று வழக்கு தொடர்ந்தனர். ஏறக்குறைய 81 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.

இந்தநிலையில் லண்டன் உயர் நீதிமன்ற நீதிபதி மார்கஸ் ஸ்மித் இன்று அளித்த தீரப்பில் “இந்த வழக்கில் நிஜாமின் வாரிசுகளான 7-வது நிஜாம் அவரின் வாரிசுகளும், இந்திய அரசுக்கும் தான் அந்த தொகையை எடுக்க உரிமை உண்டு. அந்த தொகை வங்கி இவர்கள் கணக்கில் மாற்ற உத்தரவிடுகிறேன். பாகிஸ்தான் உரிமை கோருவது எந்தவிதத்திலும் வெளியுறவு சட்டப்படி வராது, சட்டத்தின் அடிப்படையிலும் வராது” எனத் தெரிவித்தார்

click me!