வங்கிகள் இயங்கும் நேரங்களில் அதிரடி மாற்றங்கள்...! நடைமுறைக்கு வந்தது !!

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 8:57 AM IST
Highlights

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களது வசதிக்கேற்ப வங்கி பணி நேரங்களை கொண்டிருந்த நிலையில், ஒருங்கிணைந்த பணி நேர முறை நேற்று முதல் அறிமுகமாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் சமீபத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கி இயங்கும் நேரமும் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. நிதிச்சேவை துறை இந்த நேர மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

கடந்த 30 ஆம் தேதி வரை வரை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை தங்களது வசதிக்கேற்ப பல வங்கிகள் வேலை நேரத்தை தொடங்கிவந்தன.

இந்த நிலையில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல்  அமலாகியுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணிக்கு வங்கிகள் சேவையை தொடங்கும். மாலை 4.00 மணியுடன் பணி நேரம் முடிகிறது. பிற்பகல், 2.00 மணி முதல் 2.30 மணி வரை உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

அதே நேரத்தல்  மிசோரம், நாகலாந்து, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பொதுவான நேர முறையில் மாற்றம் இருக்கிறது. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் நாட்டின் மற்ற பகுதிகளை விட விரைவில் சூரியன் உதயமாகும் என்பதால், மிசோரம், நாகலாந்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!