பாஜக தலைவர்களின் ஊழல் குறித்து அமலாக்கத்துறைக்கு கவலையில்லை.. பாப்புலர் ஃப்ரண்ட் பொதுசெயலாளர் காட்டம்..

Published : Jun 03, 2022, 01:52 PM IST
பாஜக தலைவர்களின் ஊழல் குறித்து அமலாக்கத்துறைக்கு கவலையில்லை.. பாப்புலர் ஃப்ரண்ட் பொதுசெயலாளர் காட்டம்..

சுருக்கம்

அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க இதுப்போன்ற புலனாய்வு பிரிவுகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது.  ஆனால் பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் கருப்புப் பண பரிவர்த்தனைகள் கோடிகளுக்கு மேல் இருந்தபோதும் அமலாக்கத்துறைக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை என்று பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாப்புலர் ஃப்ரண்ட்டின் வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து பெங்களூரில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அனிஸ் அஹமது பத்திரிகையாளர் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,” பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்குகளை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் போன்ற தேசிய அளவில் பரந்து விரிந்துள்ள சமூக இயக்கத்தின் செயல்பாட்டிற்கு 13 ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் கூற்றுப்படி சொல்லப்பட்டுள்ள வைப்புத்தொகை என்பது சாதாரணமானது.
அமலாக்கத்துறையின் இந்த சமீபத்திய நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக அமைப்புக்கு எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறைகளின் ஒரு பகுதிதான் என்று கூறிய அவர், மக்கள் இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் மற்றும் நாட்டிலுள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கும் எந்த ஜனநாயகக் குரல்களையும் ஒடுக்குவதற்கு அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாக இது போன்ற ஏஜென்சிகள் செயல்படுகிறது என்று காட்டமாக விமர்சித்தார். 

மேலும் படிக்க: aadhar card: ரூ.2 லட்சம் கோடி அரசுக்கு மிச்சமாகியிருக்கு: ஆதார் திட்டத்தைப் புகழ்ந்த நிதிஆயோக் அதிகாரி

மேலும் நாங்கள் ஒவ்வொரு பைசா நிதி வசூலையும் வருமான வரித் துறைக்கு தாக்கல் செய்து வருவதால், அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிக்கு பெரிய விசாரணை ஏதுவும் தேவையிருக்காது என்று கூறினார்.
இதுமட்டுமல்லாமல் கடந்த 2022 ஆம் ஆண்டு பாப்புலர் ஃப்ரெண்ட் ரூ.120 கோடியை வசூலித்தது என்று பல ஊடகங்கள் செய்திகள் வெளியாகின. தற்போது ரூ.60 கோடி என அமலாக்கத்துறை அறிக்கை தற்போது வெளியிட்டிருப்பதன் மூலம்  முந்தைய கூறிய தகவல் யாவும் போலி என்று தற்போது தெரியவந்துள்ளது.

இதனிடையே அம்னெஸ்டி இன்டர்நேஷனல், கிரீன் பீஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற அரசு சாரா நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளும் இதே முறையில் முடக்கப்பட்டன.  மேலும் இந்த போன்ற பழிவாங்கலுக்கு பயந்து, ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் கறைபடிந்த சொத்துக்களைக் காப்பாற்ற பாஜவில் சேரும் போக்கு தற்போது நாட்டில் உள்ளது. 

அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்க இதுப்போன்ற புலனாய்வு பிரிவுகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது.  ஆனால் பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் கருப்புப் பண பரிவர்த்தனைகள் கோடிகளுக்கு மேல் இருந்தபோதும் அமலாக்கத்துறைக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை.  பாப்புலர் ஃப்ரண்ட் ஒரு ஜனநாயக ரீதியில் செயல்படும் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த மக்களிடமிருந்து உருவானது என்று தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் கண்டிக்க வேண்டும் என்று ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ள நாட்டு மக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. மேலும் ஆர்எஸ்எஸ்-  ன் தீய திட்டங்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டையும், எதிர்ப்பையும் பாப்புலர் ஃப்ரண்ட் தைரியமாக எதிர்கொள்ளும் என்று அவர் இறுதியாக கூறினார்.

மேலும் படிக்க: PFI வங்கி கணக்கு முடக்கம்..! மக்கள் பணியை பாஜகவால் முடக்க முடியாது இந்திய தேசிய லீக் திட்டவட்டம்

PREV
click me!

Recommended Stories

டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!
சத்தீஸ்கர் ரயில் விபத்துக்கு தகுதியற்ற ஓட்டுநர் தான் காரணம்.. விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!