முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்ட புஷ்கர் சிங் தாமி .. உத்தராகண்ட் இடைத்தேர்தலில் அபார வெற்றி

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 11:34 AM IST
Highlights

உத்தராகண்ட் முதல்வர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். உத்தராகண்ட் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தோற்ற நிலையில் புஷ்கர் சிங் , தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். சம்பாவத் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றுள்ளார். 
 
தற்போது நடத்த இடைத்தேர்தலில் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை புஷ்கர்சிங் தாமி தக்க வைத்துள்ளார்.   உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், தற்போது இடைத்தேர்தலில் போட்டியிட்ட தாமி, 55, 025 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் கேரளாவில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

முதல்வராக பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அரசியலமைப்பு சட்டம் படி அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். இதனால் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தது. பிப்ரவரியில் நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் கதிமா தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். மாநிலத்தின் சம்பாவத் தொகுதியில் போட்டியிட்ட புஷ்கர், தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு போட்டியாக , அந்த தொகுதியில் காங்கிரஸ் நிர்மலா கெஹ்டோரி, சமாஜ்வாதி மனோஜ் குமார் பட், சுயேச்சை வேட்பாளர் ஹிமாசு கட்கோடி ஆகியோர் களத்தில் இருந்தனர்.

மேலும் படிக்க: ஒவ்வொரு மசூதிகளில் ஏன் சிவலிங்கத்தை தேடுகிறீர்கள்..? முஸ்லீம்களும் இந்துக்களே.. ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு..
 
click me!