உஷார் மக்களே!! 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை.. மஞ்சள் நிற எச்சரிக்கை..

By Thanalakshmi VFirst Published Jun 3, 2022, 12:17 PM IST
Highlights

கர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

கர்நாடகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு நகரம்‌, பெங்களூரு கிராமம்‌, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மற்றும்‌ உடுப்பின்‌ கடலோர மாவட்டங்களில்‌ கனமழை பெய்யும்‌.

ஹாசன்‌, ஷிவமொக்கா, ராமநகர்‌, குடகு மற்றும்‌ சிக்கமகளூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ மழை பெய்து வருகிறது. தெற்கு கர்நாடகத்தின்‌ மைசூரு, மாண்டியா, சாமராஜநகர்‌ மாவட்டங்களிலும்‌ கனமழை பெய்யும்‌. பெங்களூரு மற்றும்‌ கடலோர மாவட்டங்களில்‌ மஞ்சள்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, மாநிலத்தின்‌ பெரும்பாலான மாவட்டங்களில்‌ இடியுடன்‌ கூடிய கனமழை பெய்யும்‌ என்றும்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில்‌ வெள்ளி மற்றும்‌ சனிக்கிழமைகளில்‌ மின்னல்‌ மற்றும்‌ இடியுடன்‌ கூடிய மழை பெய்யும்‌.

வட கர்நாடக மாவட்டங்களான பாகல்கோட்‌, பிதார்‌, கடக்‌, கொப்பல்‌, ராய்ச்சூர்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மழையால்‌ பாதிக்கப்படாது. மஞ்சள்‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்‌ 7.5 முதல்‌ 15 மிமீ வரை கனமழையாக இருக்கும்‌ என்று கணிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: priyanka gandhi news: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று

click me!