பிரதமர் மோடியை கொல்ல திட்டமா? RDX வெடி பொருளுடன் ஸ்லீப்பர் செல்களா? மிரட்டும் கடிதத்தால் பரபரப்பு!!

Published : Apr 01, 2022, 05:30 PM IST
பிரதமர் மோடியை கொல்ல திட்டமா? RDX வெடி பொருளுடன் ஸ்லீப்பர் செல்களா? மிரட்டும் கடிதத்தால் பரபரப்பு!!

சுருக்கம்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்ப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்ப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கு SPG எனும் ஸ்பெஷல் புரொடெக்சன் குரூப் என்ற அமைப்பு முழு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்த அமைப்பு 24 மணி நேரமும்  பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. இந்திய பிரதமருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அமைப்பு பல பயிற்சிகளை பெற்றுள்ளது. மேலும் இந்த SPG அமைப்பில் மொத்தம் 3000 வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் பெற்றவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் FNF-2000 Assault Rifle, Automatic Gun and 17 M revolvers போன்ற ஆயுதங்களுடன் பிரதமரை சுற்றி இருப்பார்கள்.

இவ்வளவு பாதுகாப்புகளுக்கு நடுவில் பிரதமர் மோடியை கொல்லை சதி திட்டம் நடந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வு முகமையான NIAவின் மும்பை பிரிவுக்கு வந்துள்ள இ-மெயிலில், பிரதமர் மோடியை கொல்லும் வேலைக்காக 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் சுமார் 20 கிலோ அளவுக்கு ஆர்.டி.எக்ஸ். வெடி பொருட்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படைகள் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இ மெயில் அனுப்பிய நபர், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், இதனால் சதி குறித்த விபரங்கள் வெளியே தெரியாது என்றும் மெயிலில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் என்.ஐ.ஏ.வுக்கு வந்த இ மெயிலில், சதித் திட்டத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட வேலைகளை செயல்படுத்த ஸ்லீப்பர் செல்கள் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ மெயிலில் குறிப்பிட்டுள்ள தகவல்படி, இந்த சதித்திட்டத்தில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. என்ஐஏவின் மும்பை பிரிவுக்கு வந்துள்ள இந்த மின் அஞ்சல், விசாரணைக்காக மேலும் சில அமைப்புகளுக்கு பகிரப்பட்டுள்ளது. தற்போது சைபர் கிரைம் அமைப்பு, மின் அஞ்சல் வந்த ஐ.பி. அட்ரஸை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?